எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று டெல்லியில் சியோமியின் அறிமுக நிகழ்வில் ரெட்மி ஒய்3 மற்றும் ரெட்மி 7 ஆகியவை புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட் பல்ப் அமேசானின் குரல் உதவி அலெக்ஸாவுடனும் கூகுள் அசிஸ்டெண்டனுடனும் இணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மற்ற சிறப்பம்சங்கள் என்னவென்றால் இந்த எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப் 16,000 மில்லியன் வண்ணங்களை பிரதிபலிக்ககூடியது. 11 வருட ஆயுட் காலம் கொண்டது. இந்த ஸ்மார்ட் பல்பினை எம் ஐ ஸ்மார்ட் ஹோம் ஆப் மூலமாக கட்டுபடுத்தமுடியும். எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப்பின் விற்பனை crowdfunding வழியாகவோ அல்லது Mi.com வழியாகவோ கிடைக்கும் என்று வெளியீட்டு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 26 முதல் எம்ஐ.காம் வழியாகவும் க்ரவுட் ஃபண்டிங் வழியாக விற்பனைக்கு வரும் நாளில் தெரிய வரும்.
11 வருட ஆயுட் காலம் கொண்டது
16 மில்லியன் வண்ணங்களை பிரதிபலிக்கக் கூடியது
வண்ணங்களை எளிதில் மாற்றலாம்.
அமேசானின் அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலமாகவும் எம்ஐ ஹோம் ஆப் மூலமாகவும் இந்த பல்பினை கட்டுப்படுத்த முடியும்.
வயர்லெஸ் மூலமாக இந்த பல்பினை ஆன் செய்யவும் ஆஃப் பண்ணவும் முடியும், அமைப்பு முறைகள் மற்றும் வண்ணங்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்