Amazon நிறுவனம் தனது மிகவும் மலிவான 4K Streaming Stick ஆன Fire TV Stick 4K Select-ஐ இந்தியாவில் ₹5,499 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது
Photo Credit: Amazon
Fire TV Stick 4K Select: Vega OS, 4K, Alexa வசதி
உங்க வீட்ல இருக்க பழைய LED/LCD டிவி-யை 4K Smart TV-யா மாத்தணும்னு நினைக்கிறீங்களா? அப்போ உங்களுக்கான செம நியூஸ் இதுதான்! Amazon, இந்தியாவில அவங்களோட புது Fire TV Stick-ஐ லான்ச் பண்ணியிருக்காங்க. அதுதான், Amazon Fire TV Stick 4K Select. இதோட முதல் ஹைலைட்டே இதன் விலைதான். வெறும் ₹5,499-க்கு இந்த டிவைஸ் கிடைக்குது. இது Amazon-னோட 4K Streaming Stick வரிசையிலேயே ரொம்ப மலிவான விலை! இவ்வளவு குறைஞ்ச விலையில 4K Ultra HD அனுபவத்தை கொடுக்க வர்றதுதான் இதோட ஸ்பெஷல். கூடவே HDR10+ சப்போர்ட்டும் இருக்கு. அதனால பிக்சர் குவாலிட்டி, கலர் துல்லியம் எல்லாம் பிரமாதமா இருக்கும்.
இந்த டிவைஸோட முக்கியமான மாற்றம், இதுல பயன்படுத்தப்பட்டிருக்கிற புதுசா அறிமுகப்படுத்தப்பட்ட Vega OS. இது Amazon-னோட புது Operating System. இந்த OS, வேகமான அப்ளிகேஷன் லோடிங் மற்றும் ஸ்மூத்தான இன்டர்ஃபேஸை கொடுக்குமாம். இதற்காகவே, இந்தியாவில இருக்கிற எல்லா Fire TV Stick-லயும் இதுதான் வேகமானதுன்னு சொல்லப்படுற 1.7GHz Quad-core ப்ராசஸர் இதில் இருக்கு.
இந்த டிவைஸை உங்க டிவில இருக்கிற HDMI port-ல கனெக்ட் பண்ணா போதும். Prime Video, Netflix, Disney+ Hotstar, YouTube உட்பட எல்லா முக்கிய OTT தளங்களையும் இது சப்போர்ட் பண்ணும். இந்த Amazon Fire TV Stick 4K Select இப்போ Amazon.in, Flipkart மற்றும் Croma, Reliance Retail போன்ற ரீடெய்ல் கடைகளிலும் கிடைக்குது. உங்க பழைய டிவியை ஸ்மார்ட் டிவியா மாத்த இது ஒரு சிறந்த சாய்ஸா இருக்கும்னு நினைக்கிறீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability