பிரட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹேரி, ஃபோர்ட்நைட் போன்ற வீடியோ கேம்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கை குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
மேற்கு லன்டணில் உள்ள அமைந்துள்ள YMCA வழாகத்தில் நடைபெற்ற கூட்டதில் உரையாற்றிய இளவரசர் ஹேரி குழந்தைகள் மீது சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் தவரான தாக்கத்தை குறித்து பேசினார். மேலும் இளவரசர் ஹேரி இதுபோன்ற வீடியோ கேம்கள் 'போதை பொருட்கள் மற்றும் மதுவை விட' ஒருவரை அடிமைபடுத்துகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் 'இந்த கேம்களை விளையாடுவதன் மூலம் என்ன பயன் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். அதுபோல் அவர் தற்போதைய பொற்றோர்கள் இதுபோன்ற தொழிநுட்பங்களில் இருந்து குழைந்தைகளை மீட்க உரிய நடவெடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார். மேலும் இதுபோன்ற அடிமை தனத்தில் இருந்து பிள்ளைகளை மீட்க பெற்றோர்களுக்கு தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் குழந்தைகள் வீடியோ கேம்கள் மட்டுமின்றி வெளியே இருக்கும் அழகான உலகத்தை ரசிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சீனாவில் 13 வயதுக்குள்ளே இருக்கும் பிள்ளைகள் பப்ஜி விளையாட்டால் அடிமைபட்டிருப்பதால் படிப்பில் ஆர்வம் குறைகிறது என்ற குற்றச்சாட்டிற்கு பிறகு சில மாநிலங்களில் இந்த வீடியோ கேம் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஃபோர்ட்நைட் விளையாட்டின் தாக்கம் குழந்தைகளிடம் தொடர்ந்து அதிகபடியான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்