தடை செய்யப்படுகிறதா பப்ஜி? மாணவர்களின் படிப்பை பாதிப்பதாக குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் பப்ஜி விளையாட்டின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது!

தடை செய்யப்படுகிறதா பப்ஜி? மாணவர்களின் படிப்பை பாதிப்பதாக குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்ததால்... இந்த விளையாட்டை தடை செய்ய மனு

ஹைலைட்ஸ்
  • இந்த விளையாட்டால் பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைவதாக குற்றச்சாட்டு!
  • போதைப்பொருட்களை போல் இதுவும் அடிமைபடுத்துவதாக புகார்!
  • உடனடியாக தடை செய்யபட சொல்லி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட் போன்களில் இயங்கும் பப்ஜி வீடியோ கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் இந்த வீடியோ கேமிற்கு நாடு முழுவதும் கிடைத்த வரவேற்பை போல காஷ்மீர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்த விளையாட்டிற்கு மாணவர்கள் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அங்குள்ள மாணவர்கள் கமிட்டியோ, ஜம்மு மற்றும் காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்கிடம் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் அவர்கள் வழங்கப்பட்ட மனுவில் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களை அடிமையாக வைத்திருக்கும் என்பதே அவர்களது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த விளையாட்டை, போதை பொருட்களுக்கு அடிமையானது போல மாணவர்கள் விளையாடி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விளையாட்டால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து காஷ்மீரில் உள்ள மாணவர் குழுவின் துணை தலைவர் ராஃவிக் மாஃக்தீமி, பிரிஸ்ட்டின் காஷ்மீர் செய்தியாளர்களிடம் பேசியபோது, '10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் குறைந்த மதிப்பெண்களை பார்த்தவுடனே இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த ஓரு உடனடி நடவடிக்கையோ அல்லது தடையோ எடுக்கப்படாதது ஏன்? ' என கேள்வி எழுப்பினார்.

'மேலும் ரஃப்விக், விளையாடுபவர்களை அடிமையாக்கும் இந்த ஆன்லைன் விளையாட்டு, 24 மணிநேரமும் மாணவர்களை மொபைல் போனை பயன்படுத்தி விளையாட தூண்டுகிறது. இது அசல் போதை பொருட்களை விட மிகவும் ஆபத்தானது 'என்று கூறினார்.

இது தொடர்பாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் மாணவர் சங்க தலைவர் அபரார் அகமது பாட் கூறுகையில், "அரசாங்கம் இந்த விவகாரத்தை உடனடியாக கையில் எடுக்க வேண்டும் என்றும், இந்த விளையாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை வீண் செய்துவிடுவதாகவும் குற்றம் சாட்டினார்'.

இதுகுறித்து கேஜெட்ஸ் 360, பப்ஜி மொபைல் நிறுவனத்திற்குத் தணிக்கைக் குழுவினர் கேள்வி எழுப்பினோம், ஆனால் பதில் இன்னும் வரவில்லை.

இது போன்ற சிக்கல்களில் மாட்டுவது பப்ஜி மொபைல் நிறுவனத்திற்கு முதல் தடவை அல்ல. கடந்த வருடம் வெளியிடப்பட்ட ஓரு அறிவிப்பில், இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது என்று தகவல் வெளியானது. பின்னர் அது வதந்தி என்ற மறுப்பும் வெளியானது.

இந்த விளையாட்டை தடை செய்வது மிகவும் கடினமான செயலாகும். இதில் இருந்து நாம் விடுபட, முக்கியமாக நாம் ஸ்மார்ட் போனில் செலவழிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.


If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »