PUBG மொபைல் 0.18.0 அப்டேட் மே 7-ம் தேதி ரிலீஸ்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 ஏப்ரல் 2020 11:07 IST
ஹைலைட்ஸ்
  • புதிய மிராமர் 2.0 வரைபடம் PUBG மொபைல் 0.18.0 அப்டேட்டில் வரக்கூடும்
  • புதிய அப்டேட்டில் கோல்டன் மிராடோ கார் வரவுள்ளது
  • அப்டேடில் Safety Scramble Mode வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

PUBG மொபைல் அடுத்த மாதம் புதிய அப்டேட்டைப் பெற உள்ளது

PUBG Mobile அடுத்த மாதம் புதிய அப்டேட்டை பெறப்போகிறது. புதிய PUBG மொபைல் அப்டேட் மே 7 அன்று பதிப்பு 0.18.0 உடன் வெளிவரும் என்பதை டென்சென்ட் கேம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. பிரபலமான பேட்டில் ராயல் விளையாட்டு இந்த புதிய அப்டேட்டில் புதிய அம்சங்களைப் பெறும். முந்தைய அறிக்கைகள் உண்மையாக இருந்தால், வரவிருக்கும் அப்டேட் PUBG மொபைலில் சில பெரிய மாற்றங்களையும் கொண்டு வரும்.

PUBG மொபைல் 0.18.0 அப்டேட்டில் மீராமர் வரைபடத்தின் புதிய பதிப்பான மிராமர் 2.0-வில் Safety Scramble Mode மற்றும் Jungle Adventure Guide Mode ஆகியவை அடங்கும் என்று சமீபத்திய கசிவு தெரிவித்தது.


அப்டேட்டின் சிறப்பம்சம்:

புதிய அப்டேட் மே 7-ஆம் தேதி வெளியிடப்படும் என்று பப்ஜி மொபைல் குழு ட்விட்டரில் அறிவித்துள்ளது. பல புதிய அம்சங்கள், மோடுகள் மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட வரைபடத்தை பப்ஜி மொபைல் 0.18.0-ல் சேர்க்கலாம். பதிவில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் ஒரு காரின் இரைச்சலை கேட்கலாம், இது ஒரு புதிய கோல்டன் மிராடோவாக இருக்கலாம்.

வீடியோவில் ஒரு விற்பனை இயந்திரமும் தோன்றும். இந்த விற்பனை இயந்திரங்களை புதிய மிராமர் 2.0 வரைபடத்தில் வைக்கலாம், மேலும் இந்த இயந்திரங்களுக்கு வலி நிவாரணி மருந்துகள் மற்றும் எனர்ஜி பானங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் விற்பனை இயந்திரம் தவிர, வேறு எந்த தகவலும் வீடியோவில் கொடுக்கப்படவில்லை.

வரவிருக்கும் PUBG மொபைல் 0.18.0 அப்டேட்டின் பீட்டா பதிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிய Safety Scramble Mode மற்றும் Jungle Adventure Guide Mode போன்ற அம்சங்கள் ஏற்கனவே உள்ளன.

மிராமர் 2.0 வரைபடத்தில் ரேசிங் வளைவு, புதிய கோல்டன் மிராடோ கார், வரைபடத்திற்குள் புதிய விற்பனை இயந்திரங்கள் மற்றும் வாட்டர் சிட்டி என்ற புதிய பகுதி இடம்பெறும் என்று பீட்டா அறிவுறுத்துகிறது. வரவிருக்கும் புதிய மோடுகளில் ஒன்று PC பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மோடைப் போலவே இருக்கும் என்றும் பப்ஜி மொபைல் பீட்டா அறிவுறுத்துகிறது. இது வரைபடத்தில் வெளிப்புற வட்டத்துடன் நீல உள் வட்டத்தையும் கொண்டிருக்கும். வீரர்கள் இந்த நீல மண்டலத்திற்கு வெளியே இருக்க வேண்டும், ஆனால் வெளி வட்டத்திற்குள் இருக்க வேண்டும்.

Safety Scramble Mode புதிய EvoGround mode-ஆக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதிய Jungle Adventure Guide Mode குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பிற எதிர்பார்க்கப்படும் மாற்றங்களில் Win94 துப்பாக்கிக்கான புதிய scope ஆதரவு, புதிய பயிற்சி முறை மற்றும் புதிய முடிவுத் திரை ஆகியவை அடங்கும்.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PUBG Mobile, PUBG Mobile Update, Tencent Games
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆஃபர் முடியுறதுக்குள்ள செக் பண்ணுங்க! Huge Discount on Samsung Galaxy S25 Plus 5G: Rs 31,700 Off on Amazon India
  2. லீக்கான மிரட்டல் தகவல்கள்Oppo Find X9 Ultra Leak: Dual 200MP Periscope Cameras Confirmed?
  3. 200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra
  4. ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?
  5. ஜனவரி லான்ச் உறுதி! Poco M8 and M8 Pro India Launch: Everything We Know So Far
  6. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  7. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  8. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  9. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  10. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.