சீன செயலிகள் தடையால், PUBG-க்கும் இந்தியாவில் தடை விதிக்கப்படுமா?- ஒரு விரிவான அலசல்!

பப்ஜி உண்மையில் சீன ஆப் தானா, அதனை எந்த நிறுவனம் டெவலப் செய்தது என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

சீன செயலிகள் தடையால், PUBG-க்கும் இந்தியாவில் தடை விதிக்கப்படுமா?- ஒரு விரிவான அலசல்!

இந்தியாவில் பப்ஜி கேம்க்கு தடை விதிக்கப்படுமா?

ஹைலைட்ஸ்
  • இந்திய கேமர்களின் நாடித்துடிப்பாக பப்ஜி உள்ளது
  • பப்ஜி தடை சீன செயலியா, கொரியன் செயலியா என்ற குழப்பம் நிலவுகிறது
  • இந்தியாவில் இதுவரையில் $38.6 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.
விளம்பரம்

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம்  டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்கள் தடை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் 47 சீன ஆப்கள் தடை செய்யப்பட உள்ளன. ஆனால், எந்தெந்த ஆப்கள் தடை செய்யப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இதனிடையே தற்போது தடை செய்யப்பட உள்ள 47 ஆப்களின் பட்டியலில் பிரபலமான பப்ஜி கேம் செயலியும் இடம் பெறும் என்றும், இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் சில விமர்சர்கள் பப்ஜி, சீன ஆப் கிடையாது என்றும் அதனால் அது தடை செய்யப்படாது என்றும் கூறுகின்றனர்.

உண்மையில் பப்ஜி சீன ஆப்தானா அல்லது வேறு எந்த நாட்டைச் சேர்ந்தது? இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்படுமா என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்குப் பார்ப்போம். 

இந்தியாவைப் பொறுத்தவரையில் சீன ஆப் பயனர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். இதனால் இந்திய பயனர்களின் விவரங்களை சீன நாட்டுக்கு அனுப்புவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கடந்த ஜூன் மாதம், சீன ஆப்கள் தடை செய்யப்பட்டன. தேசிய நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டன. இதில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த டிக் டாக் செயலியும், இன்னும் பிரபலமான ஹலோ, யுசி பிரவுசர் செயலிகளும் தடை செய்யப்பட்டன.

தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 47 சீன செயலிகள் தடை செய்யப்படுகின்றன. இவற்றில் பப்ஜி செயலியும் தடை செய்யப்படும் என்றே கூறப்படுகிறது. சீனாவின் லைட்ஸ்பீடு அண்ட் குவாண்டம் ஸ்டூடியோ (Light Speed and Quantum Studio) நிறுவனம் டென்சண்ட் கேம்ஸ் வைத்துள்ளது. இந்த டென்சண்ட் கேம்ஸ் பிரிவே பப்ஜி கேமை டெவலப் செய்துள்ளது. 

சென்சார் டவர் தகவலின்படி, இந்தியாவில் சுமார் 17.5 கோடி பேர் பப்ஜி கேமை இன்ஸ்டால் செய்துள்ளனர். உலகளவில் பார்க்கும் போது 24 சதவீத பயனர்கள் இந்தியாவில் மட்டும் உள்ளனர். இதுதவிர பப்ஜி கேமைப் பற்றி பல பேர் தங்களது யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் தினமும் அப்டேட் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட பப்ஜி அப்டேட்டையே முழு நேரமும் செய்து வருகின்றனர். பப்ஜி எப்படி விளையாட வேண்டும், பப்ஜியில் உள்ள டிரிக்ஸ் அண்ட் டிப்ஸ் என யூடியூப் வீடியோக்கள் அள்ளி வீசுகின்றனர். 

கூகுள் ப்ளே ஸ்டோரில் 180.3 மில்லியன் டவுன்லோட்ஸ்களை பப்ஜி பெற்றுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 389 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ப்பஜி விளையாட்டை மட்டுமே இலக்காக கொண்டு ஒப்போ, விவோ போன்ற ஸ்மார்ட்போன்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. பப்ஜி விளையாடுவதற்கு ஏற்ற ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களும் அந்த ஸ்மார்ட்போனை வாங்க எண்ணுகின்றனர். 

உண்மையில் பப்ஜி சீன ஆப்தானா?
இப்படியான சூழலில் பப்ஜி ஆப் சீனா ஆப் இல்லை என்றும், அது கொரியன் ஆப் என்றும் விமர்சனங்கள் வருகின்றனர். உண்மையில் சொல்லப்போனால், பப்ஜி கேமானது பப்ஜி கார்ப்ரேஷன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பப்ஜி கார்ப்பரேன் என்பது தென்கொரிய வீடியோ கம்பெனியான ப்ளூஹோல் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இதை வைத்து பப்ஜி தென்கொரிய ஆப் என்று சொல்லலாம். இருப்பினும் சீனாவின் டென்சண்ட் கேம்ஸ்தான் பப்ஜியை டெவலப் செய்துள்ளதால், இதில் சீனாவுக்கும் பங்கு உண்டு.
 

பப்ஜி கேம் குறித்து என்டிடிவி கேட்ஜெட்ஸ் 360 டிகிரி நடத்திய கருத்துக்கணிப்பு.

பெரும்பாலான வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்கள்தான் பப்ஜியை இந்த அளவுக்கு வளரவிட்டதற்கு காரணம். கூகுள் ப்ளே ஸ்டோரில் எண்ணற்ற கேம்கள் உள்ளன. ஆனால், திரில்லரான கேம் என்ற வரிசையில் பப்ஜி முதலிடத்தில் இருப்பதால் கேமர்களின் கவனம் பப்ஜியை நோக்கி சென்றுள்ளது.

பப்ஜி நிறுவனமும் அனைத்து தரப்பு ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்றவாறு பப்பி, பப்ஜி லைட் என வழங்குகியுள்ளது. இதற்கு முன்பு காஷ்மீரில் ஒரு மாணவர் பப்ஜி விளையாடி, தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தார். இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரி மாத இறுதியில், குஜராத் அரசாங்கம் பப்ஜியை தடை செய்யும்படி அறிவிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »