'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' (Harry Potter: Wizards Unite) கேமை இந்தியா உட்பட 143 நாடுகளில் அறிமுகமாகியுள்ளது. தற்போது விளையாட கிடைக்கும் 143 நாடுகள் பட்டியலில் இந்தியா உட்பட பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், இயர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ, பாக்கிஸ்தான், சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அடங்கும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் உட்பட உலகம் முழுவதும் இந்த 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முதலில் பீடா வெர்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டு சோதித்த பிறகே இந்த கேம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகியுள்ளது.
முன்னதாக 2016ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 'போகேமான் கோ' (Pokeman Go) என்ற வெற்றிகரமான விளையாட்டை அறிமுகப்படுத்திய நிறுவனம்தான் 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேமை கூகுள் ப்லே ஸ்டோர், சாம்சங் கேலக்சி ஸ்டோர் மற்றும் ஆப்பின் ஆப் ஸ்டோர் என அனைத்திலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
144 நாடுகளில் கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டு முன்னதாக சனிக்கிழமையான ஜூன் 22 அன்று இந்திய நேரப்படி இரவு 9:30 மணியளவில் இந்தியா உட்பட 25 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் 9 மணி நேரத்திற்குபின் மேலும் 119 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்'-ன் அதிகாரப்பூர்வமான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவில் 'இன்னும் அதிக நாடுகளில் இந்த விளையாட்டு அறிமுகமாகவுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்