Photo Credit: Mike Stobe / GETTY IMAGES NORTH AMERICA / AFP
வெற்றிக் கொண்டாடத்தில் கைல் கியர்ஸ்டோர்ஃப்!
அமெரிக்காவை சேர்ந்த "புகா" என்கிற கைல் கியர்ஸ்டோர்ஃப்-தான் (Kyle Giersdorf), ஃபோர்ட்நைட் (Fortnite) கேமில் தனி பிரிவில் முதல் உலக சாம்பியன். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்த 16 வயது சிறுவன் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா, 3 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 22 கோடியே 66 லட்சம் ரூபாய்.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த இந்த இளம் கேமர் முதலில் விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் முன்னிலை வகித்தார், முதலிடத்தில் இருந்த இவர் சற்றும் கூட கீழே இறங்கவில்லை.
இறுதி ஆட்டத்தின் முடிவில் இவர் தனக்கு அடுத்து இருந்தவரை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிக புள்ளிகளை வைத்திருந்தார். (இவருடைய புள்ளிகள்-59, இரண்டாவது இடத்தில் இருந்தவரின் புள்ளிகள்-33)
யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறும் ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் பல மில்லியன் டாலர்களை பரிசுத்தொகையாக கொண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஆறு ஆட்டங்களிலும், இந்த 16 வயது சிறுவன் தன் நிலையில் சீராகவே இருந்தார்.
இவரது நண்பர் கொலின் பிராட்லி (Colin Bradley) இறுதிப் போட்டிக்குப் பிறகு AFP -க்கு அளித்த பேட்டியில்,"இன்று காலையிலிருந்து அவர் எந்த கவலையுமின்றி, உற்சாகமாகவே இருந்தார்" என கூறினார்.
இந்த விளையாட்டில், போட்டியாளர்கள் ஒரு தீவுக்குள் தள்ளப்படுகிறார்கள், அங்கு அவர்கள் மஆயுதங்களையும் பிற வளங்களையும் தேடி எடுத்து மற்ற வீரர்களை கொல்ல வேண்டும், இறிதியில் உயிருடன் இருப்பவர்களே வெற்றியாளர்.
"அவர் புத்திசாலிதனமான வீரர்களில் ஒருவர். எப்போது தாக்க வேண்டும், எப்போது தாக்கக்கூடாது, உயர்ந்த தரையில் இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு போர்த் திறன் வாய்ந்த வீரர்" என்று பிராட்லி கூறினார்.
"இது ஒரு விளையாட்டு என்று நிறைய பேர் நினைக்கிறார்கள், ஆனால் அவர் இந்த விளையாட்டிற்கான பயிற்சி, அர்ப்பணிப்பு, உறுதியுடன் இருக்கிறார்" என புகாவின் அத்தை டான் சீடர்ஸ் (Dawn Seiders) கூறினார்.
எபிக் கேம்ஸ் - ஃபோர்ட்நைட்டின் படைப்பாளிகள் - இந்த விளையாட்டின் தொடக்க நிகழ்விற்கு 100 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 700 கோடி) செலவிட்டனர்.
இந்த மூன்று நாள் போட்டிகளில், எபிக் கேம்ஸ் 30 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 200 கோடி) பரிசுத் தொகையை வழங்கியுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 50,000 டாலர்கள் (சுமார் 34.5 லட்சம் ரூபாய்) உறுதியான பரிசுத் தொகையை வழங்கியிருந்தது.
முன்னதாக சனிக்கிழமையன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவுப் போட்டியில் "நைஹ்ராக்ஸ்" மற்றும் "அக்வா" என்ற புனைப்பெயர்களைப் கொண்ட கேமர்கள் அந்த பிரிகில் முதல் ஃபோர்ட்நைட் உலக சாம்பியனானர்கள், இவர்களுக்கு தலா 1.5 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியின் போது, புகா மற்றுமின்றி இன்னும் மூன்று வீரர்களும் மில்லியனர்களாக மாறினர்: "சால்ம்" (Psalm) (1.8 மில்லியன் டாலர்கள்), "எபிக்வேல்" (Epikwhale) (1.2 மில்லியன் டாலர்கள்) மற்றும் கிரியோ (Kreo) (1.05 மில்லியன் டாலர்கள்) என்ற பரிசுத்தொகையை வென்றனர்.
13 வயதான அர்ஜென்டினா வீரர் "கிங்" எனப்படும் தியாகோ லாப், மில்லியன் டாலர் மதிப்பை (900,000 டாலர்கள்) சிறிய இடைவெளியில் தவறவிட்டார். இவர் இந்த போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இவர் ஆறு போட்டிகளில் 21 போட்டியாளர்களை வென்றிருந்தார். 23 என்ற புகாவின் எண்ணிக்கையை அடுத்த சிறந்த எண்ணிக்கை இவருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்