யூ-டியூப் சேனலுக்காக ரிஸ்க் எடுத்த இளைஞர்கள்… பரிதாப சாவு!

விளம்பரம்
Written by Cleve R. Wootson Jr., The Washington Post மேம்படுத்தப்பட்டது: 9 ஜூலை 2018 19:38 IST

Photo Credit: YouTube/ High On Life

கடந்த 3 ஆம் தேதி கனடாவில் இருக்கும் ஷானன் நீர்வீழ்ச்சியில், ‘ஹை ஆன் லைஃப்’ என்ற தங்களது யூ-டியூப் சேனலுக்காக ஒரு ரிஸ்க் வீடியோவை எடுக்க முயன்ற 1 பெண் உட்பட 3 இளைஞர்கள் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

‘ஹை ஆன் லைஃப்’ என்ற யூ-டியூப் சேனலை சில இளைஞர்கள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். உலகின் மிக அழகான, அதே நேரத்தில் ஆபத்தான பகுதிகளுக்குச் சென்று சாகசங்கள் நிகழ்த்துவது இவர்களின் வழக்கம். அப்படி அவர்கள் நிகழ்த்தும் சாகசங்களை வீடியோ படம் பிடித்து, தங்களது யூ-டியூப் சேனலில் அப்லோட் செய்வதை முழு நேர வேலையாக வைத்திருக்கின்றனர் ‘ஹை ஆன் லைஃப்’.

இந்நிலையில், மேகன் ஸ்க்ரேப்பர், ரைகர் கேம்பல், அலெக்ஸி லியாக் ஆகிய ‘ஹை ஆன் லைஃப்’ உறுப்பினர்கள், கனடாவில் இருக்கும் ஷானன் நீர்வீழ்ச்சியில் ஒரு அபாயகரமான டைவிங்கிற்குத் தயாராகி வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மேகன் நீர் வீழ்ச்சிக்குள் வழுக்கி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற ரைகர் மற்றும் அலெக்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளனர். இதையடுத்து, மூன்று பேரும் நீர்வீழ்ச்சியின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பிய நிலையில், ஹை ஆன் லைஃப் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. 
 

 

அந்த வீடியோவில் குழு உறுப்பினர்கள், ‘இந்த உலகம் குறிப்பிடத்தக்க மூவரை இழந்துள்ளது. ஒவ்வொரு நாளையும் உயிரிழந்த எங்கள் சகாக்கள் மூவரும் முழு மனதோடு வாழ்ந்தனர். நேர்மறை சிந்தனைக்கும், தைரியத்துக்கும் பக்கமாக நின்று ஒரு மிகச் சிறந்த வாழ்க்கையை அவர்கள் நடத்தினர். அவர்களின் திறனைப் பற்றியும் பிடிப்புகள் பற்றியும் உலகம் முழுவதும் பல லட்சம் பேருக்கு எடுத்துக் கூறினர்’ என்று உருக்கமாக பேசினர்.

 

 

அந்த வீடியோவின் கீழே பலர் ‘ஹை ஆன் லைஃப்’-ஐ விமர்சனம் செய்து கமென்ட்டுகள் பதிவு செய்தனர். 

Advertisement

குறிப்பாக, ‘உயிரிழக்காமலும் நேர்மறையாகவும் தைரியத்துடனும் வாழ முடியும். உங்கள் கருத்தில் உடன்பாடில்லை’ என்றார் ஒருவர்.

இன்னொருவர், ‘வாழ்க்கையை முழுவதுமாக வாழும் நபர் செய்யும் செயல் அல்ல அது’ என்று விமர்சித்துள்ளார்.

ஹை ஆன் லைஃப் குழு வீடியோவில், ‘ரைகர், மேகன் மற்றும் அலெக்ஸி ஆகியோரின் எண்ணங்களை முன்னெடுத்துச் செல்ல உங்களால் முடிந்த உதவியை எங்களுக்கு நிதி கொடுப்பதன் மூலம் செய்யுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் கருத்துக்கும் பலமான விமர்சனங்கள் எழுந்தன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: High on Life, YouTube, Instagram
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Watch GT 6 Pro, GT 6: 21 நாள் பேட்டரி, IP69 ரேட்டிங் – இந்தியா விலை & அம்சங்கள்!
  2. OnePlus 15R, Pad Go 2 இந்திய அறிமுகம்: தேதி, அம்சங்கள் விவரம்!
  3. Oppo A6x: 6500mAh பேட்டரி, Dimensity 6300 – முழு விவரம்!
  4. 200MP கேமரா, 8000mAh பேட்டரி! HONOR 500 Pro-வில் Snapdragon 8 Elite – வெறித்தனமான அம்சங்களுடன் அறிமுகம்
  5. OnePlus ரசிகர்களே! உங்க 15R-ஆ இதுதான்! Snapdragon 8 Gen 5 சிப்செட்டோட புதிய Ace 6T போன்
  6. மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek
  7. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  8. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  9. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  10. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.