ஜப்பானிய நிறுவனமான சோனி வீடியோகேம், பாட்டு, படம் என அனைத்திலுமே ஒரு ரவுண்டு வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகின் முக்கிய இசை வெளியீட்டு நிறுவனமான இஎம்ஐ நிறுவனத்தை, 1.9 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளது சோனி.
இசை வெளியீட்டு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம், லண்டனைச் சேர்ந்த இஎம்ஐ மியூசிக் பப்ளிஷிங். சுமார் 2.1 பில்லியன் பாடல்களின் ஒலிபரப்பு உரிமையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் புகழ்பெற்ற குயின் மற்றும் சாம் ஸ்மித், பேரல் வில்லியம்ஸ் பாடல்களும் அடங்கும். உலகின் இரண்டாவது பெரிய இசை வெளியீட்டு நிறுவனமான `இஎம்ஐ'யை, சோனி நிறுவனம் 1.9 பில்லியன் டாலருக்கு (ஏறக்ககுறைய 12 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) அளவில் விலைக்கு வாங்கியுள்ளது.
இதுகுறித்து சோனி நிறுவனத்தின் சிஇஓ கெனிச்சிரோ யோஷிதா கூறுகையில், "இந்த ஒப்பந்தம் சோனி நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும். மிகப்பெரிய நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகின் நம்பர் 1 இடத்திற்கு நிச்சயமாக வருவோம்" என்றார். சோனி நிறுவனம் ஏற்கனவே 2.3 மில்லியன் அளவுக்கு காப்பிரைட் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்