இஎம்ஐ இசை வெளியீட்டு நிறுவனத்தை வாங்கியது சோனி

உலகின் முக்கிய இசை வெளியீட்டு நிறுவனமான இஎம்ஐ நிறுவனத்தை, 1.9 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளது சோனி

இஎம்ஐ இசை வெளியீட்டு நிறுவனத்தை வாங்கியது சோனி
ஹைலைட்ஸ்
  • உலகின் மிகப் பெரிய இசை வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று இஎம்ஐ
  • சுமார் 2.1 பில்லியன் பாடல்களின் ஒலிபரப்பு உரிமையை வைத்திருக்கிறது
  • இந்த இஎம்ஐ நிறுவனத்தை சோனி விலைக்கு வாங்கியுள்ளது
விளம்பரம்

ஜப்பானிய நிறுவனமான சோனி வீடியோகேம், பாட்டு, படம் என அனைத்திலுமே ஒரு ரவுண்டு வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகின் முக்கிய இசை வெளியீட்டு நிறுவனமான இஎம்ஐ நிறுவனத்தை, 1.9 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளது சோனி.

இசை வெளியீட்டு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம், லண்டனைச் சேர்ந்த இஎம்ஐ மியூசிக் பப்ளிஷிங். சுமார் 2.1 பில்லியன் பாடல்களின் ஒலிபரப்பு உரிமையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் புகழ்பெற்ற குயின் மற்றும் சாம் ஸ்மித், பேரல் வில்லியம்ஸ் பாடல்களும் அடங்கும். உலகின் இரண்டாவது பெரிய இசை வெளியீட்டு நிறுவனமான `இஎம்ஐ'யை, சோனி நிறுவனம் 1.9 பில்லியன் டாலருக்கு (ஏறக்ககுறைய 12 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) அளவில் விலைக்கு வாங்கியுள்ளது.

இதுகுறித்து சோனி நிறுவனத்தின் சிஇஓ கெனிச்சிரோ யோஷிதா கூறுகையில், "இந்த ஒப்பந்தம் சோனி நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும். மிகப்பெரிய நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகின் நம்பர் 1 இடத்திற்கு நிச்சயமாக வருவோம்" என்றார். சோனி நிறுவனம் ஏற்கனவே 2.3 மில்லியன் அளவுக்கு காப்பிரைட் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »