உன்னி முகுந்தன், நிவின் பாலி நடிப்பில் அசத்தும் Marco படம் OTT வெளியாகிறது
Photo Credit: Sony LIV
மலையாளப் படம் ரூ. 115 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது
மலையாளத்தில் உன்னி முகுந்தன் மற்றும் நிவின் பாலி நடிப்பில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் மார்கோ. இப்படம் ஜனவரி 3ம் தேதி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி உள்ளது. மலையாளத்தை போல் தமிழ் ரசிகர்களையும் இப்படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஹனீப் அடேனி இயக்கி உள்ளார். உன்னி முகுந்தன் நடித்த மலையாள ஆக்ஷன் டிராமாவான மார்கோ பாக்ஸ் ஆபிஸில் 115 கோடிகள் வசூல் செய்துள்ளது.
100 கோடியை தாண்டிய முதல் ஏ-ரேட்டிங் பெற்ற மலையாளப் படமாக இது அமைந்தது. இப்போது OTT ஒப்பந்தம் மூலம் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை சோனி எல்ஐவி வாங்கியது. இது மலையாளப் படம் அதிக விலைக்கு வாங்கப்பட்ட சாதனையை படைத்துள்ளது.
மார்கோவின் ஸ்ட்ரீமிங் உரிமை சோனி லைவ் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. படம் விரைவில் கன்னட திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால், அதன் OTT பிரீமியரை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஸ்ட்ரீமிங் தேதி தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பின் கீழ் ஷரீஃப் முஹம்மத் தயாரித்த ஹனீப் அடேனி இயக்கிய மார்கோ ஒரு நட்சத்திரக் குழுவைக் கொண்டுள்ளது. உன்னி முகுந்தனுடன், சித்திக், ஜெகதீஷ், அபிமன்யு எஸ். திலகன், கபீர் துஹான் சிங், அன்சன் பால், யுக்தி தரேஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூரின் அபாரமான நடிப்பு படத்தின் இறுக்கமான சூழலை மேம்படுத்துகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 115 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இது 7.5 / 10 ஐஎம்டிபி மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
இந்தத் திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் திரைப்படத்தின் ஒரு முழுமையான ஸ்பின்ஆஃப் ஆகும். இருப்பினும் இரண்டு படங்களும் ஒன்றோடொன்று நேரடியாக தொடர்புடையவை அல்ல. ஆனால் மைக்கேலின் சில கதாபாத்திரங்கள் மட்டுமே வித்தியாசமான அமைப்பில் உள்ளன.
இதுவரை படைக்கப்பட்ட சாதனைகளில் அதிக வசூல் செய்த A- தரமதிப்பீடு பெற்ற மலையாளப் படமாகவும் , இந்த ஆண்டின் ஆறாவது அதிக வசூல் செய்த மலையாளப் படமாகவும் , மேலும் ஒன்பதாவது அதிக வசூல் செய்த மலையாளப் படமாகவும் அமைந்துள்ளது. இந்த படம் மலையாளம் தவிர படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
அடாட்டு என்பது கேரளாவின் மிகவும் பிரபலமான தங்க வணிக குடும்பங்களில் ஒன்றாகும். யாரும் எதிர்பார்க்காத ஒரு மர்ம சம்பவம் அடத்து குடும்பத்தை உலுக்கியது. குடும்பத் தலைவரான ஜார்ஜ், உண்மையை வெளிக்கொணரவும், அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கவும் புறப்படுகிறார். அதே நேரத்தில், அவரது இளைய சகோதரர் மார்கோ, அதே தேடலைத் தொடங்குகிறார், ஆனால் வேறு பாதையில் செல்கிறார். இது மோதலை உருவாக்குகிறது. இதனை எப்படி கையாளப்போகின்றனர் என்பது தான் படத்தின் கதையாகும். ரு மனிதனின் பழிவாங்கும் பயணத்தைச் சுற்றி, அவனைக் காட்டிக் கொடுத்த அமைப்புகளுக்கே சவால் விடும் படி இருக்கிறது கதை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Amazon Great Republic Day Sale 2026 Date Announced: See Bank Discounts, Offers