2019 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அன்று, 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவாகியுள்ளார்கள். இந்த தகவலை ஹாட்ஸ்டார் நிறுவனம் கடந்த திங்கட்கிழமையன்று வெளியிட்டது. இந்த போட்டியின் போது அதிகபடியாக ஒரே நேரத்தில் 15.6 மில்லியன் பார்வையாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் இந்த போட்டியை பார்வையிட்டவர்களில் 66 சதவிகிதம் பேர், பெரு நகரங்களை தாண்டி குறு நகரங்களில் உள்ளவர்களதான் என்ற தகவலையும் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.
ஜூன் 16 அன்று இந்தியா - பாக்கிஸ்தான் அணிகள் மோதிய நாளில் 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவானது என்பது, இந்த தளத்தில் ஒரு புதிய சாதனை என ஹாட்ஸ்டார் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக விவோ ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தின்பொழுது அதிகபடியாக ஒரே நேரத்தில் 18.6 மில்லியன் பார்வையாளர்கள் பதிவாகியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா விளையாடிய மற்ற போட்டிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா - பாக்கிஸ்தான ஆட்டம் 1.7 மடங்கு அதிக நிகழ் நேர பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. எந்த ஒரு ஒருநாள் போட்டிகளுக்கும் இல்லாத அளவில், இந்த போட்டி அதிகபடியாக ஒரே நேரத்தில் 15.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.
"இவ்வளவு பெரிய கிரிக்கெட் பார்வையாளர்களுக்கு, நாங்கள் தடையில்லாத கிரிக்கெட் அனுபவத்தை அளிக்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது", என்று ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியான வருண் நாரங் (Varun Narang) கூறியுள்ளார்.
வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வழங்குவதில், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனிலைவ், நெட்பிலிக்ஸ் ஆகிய நிறுவனங்களை கடந்து ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்