இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி M.S.Dhoni : The Untold Story என்ற திரைப்படம் வெளியானது. இதில் நடித்த சுஷந்த் சிங்கிற்கு பெரும் புகழ் கிடைத்தது.
Photo Credit: Fox Star Studios
தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷந்த் சிங் நடித்த கடைசிப்படமான 'தில் பெச்சாரா' அடுத்தமாதம் 24ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சந்தாதாரர்கள் மட்டும் இல்லாமல், ஆப் வைத்திருக்கும் அனைவரும் பார்த்து மகிழலாம் என்று டிஸ்னி ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது. சுஷந்த் சிங்கின் நினைவாக இந்த சலுகை அறிவிக்கப்படுவதாக டிஸ்னி ஹாட்ஸ்டார் கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்களான அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்டவற்றில் வெளியிடப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தமிழில் அமேசான் பிரைமில் ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முன்னதாக இந்த திரைப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருவதால், குறைந்தது அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புகள் குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
A story of love, hope, and endless memories.
— Disney+HotstarPremium (@DisneyplusHSP) June 25, 2020
Celebrating the late #SushantSinghRajput's legacy that will be etched in the minds of all and cherished forever. #DilBechara coming to everyone on July 24. pic.twitter.com/3gPJZvBRun
இதற்கிடையேதான் வளர்ந்து வரும் இளம் நட்சத்திம் சுஷந்த் சிங் தனது மும்பை இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி M.S.Dhoni : The Untold Story என்ற திரைப்படம் வெளியானது. இதில் நடித்த சுஷந்த் சிங்கிற்கு பெரும் புகழ் கிடைத்தது.
அவர் கடைசியாக தில் பெச்சாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் திரையரங்கிற்கு வர முடியாத நிலையில் உள்ளதால், அதனை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதம் 24ம் தேதி தில் பெச்சாரா டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பது கூடுதல் தகவல்.
இந்த திரைப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் மட்டும் இல்லாமல், அந்த ஆப்பை வைத்திருக்கும் அனைவரும் பார்த்து ரசிக்க முடியும்.
Can Netflix force Bollywood to reinvent itself? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS. You can also download the episode or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo T5 Lite 5G, Vivo T5 Pro 5G Get New RAM and Storage Variants in India: Price, Specifications