அதிநவீன போஸ் ஸ்லீப்-பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்!

ஒரு முறை சார்ஜ் செய்தால், 16 மணி நேரம் இயங்க கூடிய திறன் பெற்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிநவீன போஸ் ஸ்லீப்-பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்!
ஹைலைட்ஸ்
  • போஸ் ஸ்லீப்-பட்ஸ் விலை 22,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது
  • போஸ் இந்தியா.காம், அமேசான், ப்ளிப்கார்ட் ஆகியவற்றில் வெளியாக உள்ளது
விளம்பரம்

இனிமையான உறக்கத்தை உறிதியளிக்கும் போஸ் ஸ்லீப்-பட்ஸ் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இரைச்சலூட்டும் சத்தங்களை குறைத்து இன்னிசையான ஆடியோக்களை ஒலிக்க செய்யும் போஸ் ஸ்லீப்-பட்ஸ் 22,900 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது

இந்தியாவில் போஸ் ஸ்லீப்-பட்ஸ்

போஸ் இந்தியா.காம், அமேசான், ப்ளிப்கார்ட் என முன்னனி ஷாப்பிங் இணையதளங்களில் இந்த ஸ்லீப்-பட்ஸ் விற்பனைக்கு வர உள்ளன. வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்லீப்-பட்ஸ் ஆண்டுராய்டு, ஐபோன் ஆகியவற்றுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்புகள்

ஒரு இயர்-பட் 1.4 கிராம் எடை கொண்டுள்ளதாக உள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 16 மணி நேரம் இயங்க கூடிய திறன் பெற்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான ஸ்லீப்-டிப்ஸ் இதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போஸ் ஸ்லீப்-பட்ஸ் தலைமை அதிகாரி டேனியல், "தேவையற்ற இரைச்சல்களை கட்டுக்குள் வைக்க ஸ்லீப்-பட்ஸ் உதவும். மேலும், இனிமையான உறக்கத்தை உறுதி செய்யும். இசை பிரியர்கள் இதை மிகவும் விரும்புவார்கள்" என்றார்

வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி விற்பனைக்கு வரும் போஸ் ஸ்லீப்-பட்ஸை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. 9 JBL ப்ரோ ஸ்பீக்கர்கள்,10,200mAh பேட்டரியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் இந்தியாவில் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  2. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  3. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  4. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  5. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  6. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  7. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  8. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  9. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  10. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »