'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' தற்போது கூகுள் பிளே, ஐடியூன்ஸ், யூடியூப்பில்!

நீங்கள் தற்போது அவென்ஜர்ஸ்: எண்ட்கேமை கூகிள் பிளே, ஐடியூன்ஸ் மற்றும் யூடியூப்பில் இந்தியாவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' தற்போது கூகுள் பிளே, ஐடியூன்ஸ், யூடியூப்பில்!

Photo Credit: Disney/ Marvel Studios

2.793 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 19,206 கோடி) வசூல் செய்துள்ள 'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம்

ஹைலைட்ஸ்
  • 'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' ஐடியூன்ஸில் குறைந்த விலையில்
  • கூகுள் பிளே,யூடியூப்பில் பல தரங்களில் கிடைக்கப்பெருகிறது
  • ந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் இன்னும் வெளியாகவில்லை
விளம்பரம்

'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' (Avengers: Endgame) தற்போது இந்தியாவில் கூகுள் பிளே, ஐடியூன்ஸ் மற்றும் யூடியூப்பில் கிடைக்கப்பெருகிறது. பணம் செலுத்த நீங்கள் ஸ்டேண்டர்டு-டெபனிஷன் (SD) அல்லது ஹை-டெபனிஷன் (HD) என இரண்டு பதிப்பில் எது வேண்டுமோ என்பதை தேர்வு செய்துகொள்ளலாம். மூன்று சேவை தளங்களிலும் இந்த 'எண்ட்கேம்' 720p மற்றும் 1080p என இரண்டு தரங்களில் கிடைக்கப்பெருகிறது. இப்போதைக்கு, ஆங்கில பதிப்பு மட்டுமே இந்த திரைப்படம் ககிடைக்கப்பெருகிறது. ஐடியூன்ஸில், நீங்கள் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் ரூ. 120 / ரூ. 150 அல்லது ரூ. 490 / ரூ. 690, வாடகைக்கு அல்லது பெற்றுக்கொள்ளலாம். கூகுளிற்கு சொந்தமான இரண்டு தளங்களிலும், பிரம்மாண்டமான மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் அத்தியாயத்தை ரூ. 100 / ரூ. 690 மற்றும் ரூ. 150 / ரூ. 850 செலுத்தி SD மற்றும் HD-யில் முறையே வாடகைக்கு அல்லது வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் அதை ப்ளூ-ரே வட்டில் வாங்க விரும்பினால் (இந்தி, தமிழ் அல்லது தெலுங்கு பதிப்புகள் வேண்டும்), டிஸ்னி இந்தியா இன்னும் அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இப்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 2.793 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 19,206 கோடி) வசூல் செய்துள்ள இந்த திரைப்படம், அவதார் (Avatar) (2.789 பில்லியன் டாலர்கள்) உருவாக்கிய தசாப்த கால சாதனையை முறியடித்துள்ளது. இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் முதலில் ஏப்ரல் 26 அன்று வெளியிடப்பட்டது. இது உலகளவிலும் மற்றும் இந்தியாவிலும் அதன் தொடக்க வாரத்திலேயே புதிய சாதனைகளை படைத்தது. 'ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபார் ஹோம்' (Spider-Man: Far From Home) வெளியான வாரத்தில் டிஸ்னி இந்தியா எண்ட்கேமை (கூடுதல் காட்சிகளுடன்) மீண்டும் வெளியிட்டது. இது இந்தியாவில் அதிக வசூல் செய்த ஆறாவது படமாக (ரூ. 437 கோடி) மாறியது. பாகுபலி 2: முடிவு (ரூ. 1,429 கோடி), 2.0 (ரூ. 519 கோடி), பாகுபலி: ஆரம்பம் (ரூ. 515 கோடி), தங்கல் (ரூ. 511 கோடி), மற்றும் பி.கே (ரூ. 448 கோடி) ஆகிய படங்களை அடுத்து.

மிக விலையுயர்ந்த படங்களில் எண்ட்கேம் ஒன்றாகும், இதன் மதிப்பிடப்பட்ட தயாரிப்பு பட்ஜெட் 356 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 2,447 கோடி) . இதில் ராபர்ட் டவுனி ஜூனியர் (Robert Downey Jr.) அயர்ன் மேனாக, கிறிஸ் எவன்ஸ்(Chris Evans) கேப்டன் அமெரிக்காவாகவும், ஹல்காக மார்க் ருஃபாலோ (Mark Ruffalo), தோராக 
கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (Chris Hemsworth), ஸ்கார்லெட் ஜோஹன்சன் (Scarlett Johansson) ப்ளாக் விடோவாக, ஹகேயாக ஜெர்மி ரென்னர் (Jeremy Renner), டான் சீடில் (Don Cheadle) வார் மேசினாக, ஏன்ட் மேனாக பால் ரூட் (Paul Rudd), கேப்டன் மார்வெலாக ப்ரி லார்சன் (Brie Larson), நெபுலாவாக கரேன் கில்லன் (Karen Gillan), ஒகோயியாக தனாய் குரிரா (Danai Gurira), பெனடிக்ட் வோங் வோங்காகவேயும், ஹேப்பி ஹோகனாக ஜான் பாவ்ரூ (Jon Favreau), ராக்கெட்டாக பிராட்லி கூப்பர் (Bradley Cooper), பெப்பர் பாட்ஸாக க்வினெத் பேல்ட்ரோ (Gwyneth Paltrow), தானோஸாக ஜோஷ் ப்ரோலின் (Josh Brolin) ஆகியோர் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் மார்கஸ் (Christopher Markus) மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி (Stephen McFeely) ஆகியோரால் எழுதப்பட்ட கதையை அந்தோணி (Anthony) மற்றும் ஜோ ருஸ்ஸோ (Joe Russo) ஆகியோர் இயக்கியுள்ளனர்.

நீங்கள் தற்போது அவென்ஜர்ஸ்: எண்ட்கேமை கூகிள் பிளே, ஐடியூன்ஸ் மற்றும் யூடியூப்பில் இந்தியாவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus Open: OxygenOS 16 அப்டேட் வெளியீடு! AI மற்றும் Performance அப்கிரேடுகள்
  2. ரேஸ் பிரியர்களுக்கான போன்! Aston Martin-உடன் கைகோர்த்து Realme வெளியிட்ட Limited Edition போன்
  3. இனி நெட்வொர்க் இல்லனாலும் போனை யூஸ் பண்ணலாம்! Apple-ன் அடுத்த பாய்ச்சல்! புதிய Satellite அம்சங்கள்
  4. Samsung ரசிகர்களுக்கு ஒரு ஹாட் நியூஸ்! Galaxy S26 சீரிஸ் திட்டமிட்டபடி வருது! ஆனா விலையும் ஏறுது
  5. Oppo-வின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் போன்! Find X9 சீரிஸ்-ஓட கலர் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் வெளியானது
  6. உங்க WhatsApp அக்கவுண்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு! Strict Account Settings மோட் பற்றி தெரிஞ்சுக்கோங்க
  7. Moto G67 Power 5G: 7000mAh Battery & Snapdragon 7s Gen 2 உடன் இந்தியாவில் அறிமுகம்!
  8. Motorola Edge 70: 5.99mm Slim Profile, Snapdragon 7 Gen 4 உடன் அறிமுகம்
  9. OnePlus Ace 6 Pro Max: 16GB RAM, 8000mAh Battery உடன் விரைவில் அறிமுகம்
  10. Lava Agni 4: 7000mAh Battery & Aluminium Frame உடன் நவம்பர் 20-ல் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »