Samsung Galaxy Buds 4 மற்றும் 4 Pro பேட்டரி, டிசைன், முக்கிய அம்சங்கள் லீக்
வயர்லெஸ் இயர்பட்ஸ் மார்க்கெட்டுல Samsung-ன் Galaxy Buds சீரிஸ் எப்பவும் ஒரு பெரிய இடத்தை பிடிச்சிருக்கு. இப்போ அடுத்த தலைமுறை இயர்பட்ஸான Samsung Galaxy Buds 4 மற்றும் Galaxy Buds 4 Pro பத்தின ஒரு முக்கியமான லீக் வந்திருக்கு. இந்த லீக்ல வந்திருக்கிற ஒரு தகவல், பலரையும் யோசிக்க வச்சிருக்கு!அது என்னன்னா, வரப்போற Galaxy Buds 4 மாடல்ல, இயர்பட்ஸுக்குள்ள இருக்குற பேட்டரியோட சைஸ், போன மாடலை விட சின்னதா இருக்க வாய்ப்பு இருக்குதாம்!"என்னது! புது மாடல்ல பேட்டரி சைஸ் சின்னதா ஆகுதா?"—னு நீங்க யோசிக்கிறது நியாயம்தான். பொதுவாகவே, புது சாதனங்கள் வரும்போது, எல்லாமே அப்கிரேட் ஆகணும்னு தான் எதிர்பார்ப்போம். ஆனா, Samsung இப்படி ஒரு முடிவெடுத்ததுக்கு பின்னால ஒரு காரணம் இருக்குன்னு டெக் வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க.
முக்கிய காரணம், டிசைன்! சின்ன பேட்டரியை வைக்கும்போது, இயர்பட்ஸோட மொத்த சைஸை குறைக்க முடியும். இதனால், இயர்பட்ஸை காதுல அணியும்போது அது இன்னும் சௌகரியமா (comfortable) இருக்கும். ரொம்ப நேரம் யூஸ் பண்ணினாலும் எந்தப் பிரச்சினையும் இருக்காது. நிறைய பேர், சாம்சங் இயர்பட்ஸ்கள் கொஞ்சம் பெருசா இருக்குன்னு சொன்னதால, இந்த முடிவை எடுத்திருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது.
அதனால, Buds 4 மாடல்ல பேட்டரி சைஸ் குறையுதுன்னா, அதோட பேட்டரி லைஃபும் கொஞ்சம் குறையறதுக்கு வாய்ப்பிருக்கு. இதை சாஃப்ட்வேர் அப்டேட் மூலமா Samsung எப்படி சமாளிக்கப் போறாங்கன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.
ஆனா, ப்ரோ மாடல்ல கொஞ்சம் ஆறுதல் இருக்கு! Galaxy Buds 4 Pro மாடல்ல, பேட்டரியோட அளவு போன மாடலை (Buds 3 Pro) விட கொஞ்சம் மேம்படுத்தப்படலாம் அல்லது அதே அளவுல இருக்கலாம்னு சொல்றாங்க. ப்ரோ மாடல்ல பிரீமியம் அம்சங்கள் (ANC, 360 Audio) எல்லாம் இருக்குறதால, பேட்டரி லைஃப்ல அவங்க சமரசம் செஞ்சுக்க மாட்டாங்கன்னு எதிர்பார்க்கலாம். சார்ஜிங் கேஸோட பேட்டரி சைஸும் Buds 4 Pro-ல பெரிய அளவுல மாறாதுன்னு லீக்ஸ் சொல்லுது.
இந்த புதிய Buds 4 மற்றும் Buds 4 Pro, வழக்கமா Samsung-ன் ஃபோல்டபிள் போன்களான Galaxy Z Fold 8/Flip 8 அல்லது அடுத்த வருஷம் வரப்போகிற Galaxy S சீரிஸ் போன்களோட சேர்த்து லான்ச் ஆகலாம்னு எதிர்பார்க்கப்படுது.
சின்ன சைஸ்க்காக பேட்டரி லைஃபை குறைச்சிக்கலாமா? Galaxy Buds 4-ன் இந்த புது பிளான் பத்தி உங்க கருத்து என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.