Photo Credit: Amazon
Nothing நிறுவனத்துக்கு சொந்தமான CMF பிராண்டு புதிதாக மூன்று முக்கியமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் CMF Phone 1 சாதனத்துடன், CMF Buds Pro 2 மற்றும் CMF Watch Pro 2 போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டது. CMF Buds Pro 2 வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்கள், 11 மிமீ Bass மற்றும் 6 மிமீ டூயல்-டிரைவர் அமைப்புடன் வந்துள்ளது. இதனால் சவுண்ட் குவாலிட்டி தரமாக இருக்கும். 50dB வரையிலான ஹைப்ரிட் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் அம்சம் இருக்கிறது. இதனால் காதில் மாட்டி பாட்டு கேட்கும் போது, வெளியில் கேட்கும் சவுண்ட் எதுவும் நம்மை தொந்தரவு செய்யாது.
CMF Buds Pro 2 இந்தியாவில் ரூ. 4,299 விலையில் கிடைக்கிறது. Flipkart வழியாக வழியாக CMF Phone 1 வாங்குபவர்களுக்கு ரூ1,000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. நீலம், அடர் சாம்பல், வெளிர் சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
CMF Buds Pro 2 இயர்போனில் ஸ்போர்ட் டூயல் டிரைவர்கள் ஒவ்வொரு இயர்பட்களிலும் உள்ளது. 11 மிமீ Bass டிரைவர் மற்றும் 6 மிமீ மைக்ரோ பிளானர் ட்வீட்டரும் இருக்கிறது. இயர்போன்கள் 50dB வரை இரைச்சல் கேன்சலேஷன் வசதியை கொண்டுள்ளன. ஒவ்வொரு இயர்பட்களிலும் மூன்று மைக்ரோஃபோன்கள் உள்ளன. அவை தெளிவான செல்போன் அழைப்புகளுக்கு உதவும்.
Dirac Opteo வசதி கொண்ட இந்த இயர்போன்கள் Nothing X அப்ளிகேஷன் மூலம் புளூடூத் கோடெக் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சங்களை தருகிறது. இந்த இயர்போன்களைப் பயன்படுத்தி ChatGPT மூலம் CMF அல்லது Nothing ஃபோன்களில் இருந்து நேரடியாக AI வசதியுடன் இணைக்கமுடியும். சார்ஜிங் கேஸில் உள்ள ஸ்மார்ட் டயல் ஒலியளவு மற்றும் சவுண்ட் சிஸ்டத்தை இதன் மூலம் கன்ட்ரோல் செய்யலாம்.
CMF Buds Pro 2 சார்ஜிங் கேஸ் உடன் சேர்ந்து 43 மணிநேரம் பேட்டரி நிற்கும். இயர்பட்களில் ஒவ்வொன்றிலும் 60mAh பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சார்ஜிங் கேஸ் 460mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. USB Type-C போர்ட்டைப் பயன்படுத்தி 70 நிமிடங்களில் இயர்போன்களை முழுவதுமாக சார்ஜ் ஏற்றிவிடலாம். இயர்போன்கள் புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டுள்ளது.இயர்பட்கள் ஒவ்வொன்றும் 4.9g எடையுடையவை. கேசுடன் சேர்த்து 55.8 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்