சம்பவங்களில் ஒன்று திரைகளில் தோன்றும் ஆபாச படங்கள் மற்றும் மோசமான கருத்துக்களை வெளியிடும் விசித்திரமான ஆண்கள்.
ஜூம் சந்திப்பு அமர்வுகளின் end-to-end encryption இல்லாததால் கவலைகள் அதிகரித்துள்ளன
ஆசிரியர்கள் ஜூம் செயலி பயன்படுத்துவதை சிங்கப்பூர் நிறுத்தியுள்ளது. பள்ளி சிறுமிகளுடன் புவியியல் பாடத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் போது திரைகளில் ஆபாச படங்கள் தோன்றியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
முன்னதாக, கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, ஆசிரியர்கள் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Zoom செயலியில், ப்ரைவசி மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கிறது என்று பாதுகப்பு ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறினர். MOE (கல்வி அமைச்சகம்) தற்போது இரு மீறல்களையும் விசாரித்து வருகிறது, உத்தரவாதம் அளிக்கப்பட்டால் காவல் அறிக்கையை அளிக்கும்" என்று கல்வி தொழில்நுட்ப பிரிவின் அமைச்சர் ஆரோன் லோ கூறினார்.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சிக்கல்கள் முடியும் வரை எங்கள் ஆசிரியர்கள் ஜூம் பயன்படுத்துவதை நிறுத்துவார்கள்". பாதுகாப்பான log-ins தேவை, வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு meeting link-ஐ ஷேர் செய்ய கூடாது என்ற பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக லோ கூறினார்.
தைவானும், ஜெர்மனியும் ஏற்கனவே ஜூம் செயலிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதே நேரத்தில், ஆல்பாபெட்டின் Google ஜூம், டெஸ்க்டாப் பதிப்பை கார்ப்பரேட் மடிக்கணினிகளில் இருந்து தடை செய்தது.
ஜூம் செயலி பாதுகாப்பானது என்று பள்ளி கூறிய பின்னர், "ஆபாசமான ஆண்" ஊடுருவிய பிறகு, செயலியின் பயன்பாட்டை நிறுத்தியதாக கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்லி உயர்நிலைப்பள்ளியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூம் சந்திப்பு அமர்வுகளின் end-to-end encryption இல்லாததால் கவலைகள் அதிகரித்துள்ளன.
ஜூம், ப்ரைவசி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை மேம்படுத்துவதற்கான 90 நாள் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு, ஆலோசகராக முன்னாள் பேஸ்புக் பாதுகாப்புத் தலைவர் Alex Stamos-ஐ நாடியுள்ளது.
© Thomson Reuters 2020
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iPhone Air Designer Abidur Chowdhury Reportedly Quits Company for AI Startup
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra to Be Slimmer and Lighter Than Their Predecessors, Tipster Claims