Zoom செயலியில் ஹேக் செய்யப்பட்ட 5 லட்சம் பேரின் கணக்குகள்... வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

ஜூம் கணக்குகள் ஒரு கணக்கிற்கு 0.0020 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.0.15)-க்கு விற்கப்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Zoom செயலியில் ஹேக் செய்யப்பட்ட 5 லட்சம் பேரின் கணக்குகள்... வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

Photo Credit: BleepingComputer

ஹேக் செய்யப்பட்ட ஜூம் கணக்குகளில் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அடங்குவர்

ஹைலைட்ஸ்
  • dark web-ல் 5 லட்சம் ஜூம் கணக்குகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது
  • கணக்குகளில் மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேட், தனிப்பட்ட சந்திப்பு URL அடங்
  • சான்றிதழ் திணிப்பு தாக்குதல்களை பயன்படுத்தி ஜூம் கணக்குகள் சேகரிக்கபட்டது
விளம்பரம்

வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம், ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு உறவினர்கள், நண்பர்களுடன் உரையாட பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இந்த செயலி குறைந்த நாட்களில் பெரிய வளர்ச்சி கண்டது. இப்போது, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜூம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு dark web-ல் விற்பனை செய்யப்படுவதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

ஹேக்கர்கள், இந்த Zoom கணக்குகளை, இலவசமாக விற்கிறார்கள் என்று ஸ்லீப்பிங் கம்ப்யூட்டரின் அறிக்கை கூறுகிறது. இந்த தகவலை முதலில் சைபர் செக்யூரிட்டி புலனாய்வு நிறுவனமான சைபிள் சுட்டிக்காட்டியது. 5,30,000 ஜூம் கணக்குகளை, ஒரு கணக்கிற்கு 0.0020 டாலர் (சுமார் ரூ.0.15)-க்கு விற்ற விற்பனையாளர்களை நிறுவனம் கண்டறிந்தது. சான்றிதழ் திணிப்பு தாக்குதல்கள் மூலம் கசிந்த கணக்குகள் login செய்து ஹேக் செய்யப்பட்டு, பிற ஹேக்கர்களுக்கு விற்கப்படுகின்றன. 

இந்த ஜூம் கணக்கு சான்றிதழ்களில் மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேட், தனிப்பட்ட சந்திப்பு URL-கள் மற்றும் ஹோஸ்ட்கீஸ் ஆகியவை அடங்கும். ஹேக் செய்யப்பட்ட ஜூம் கணக்குகளில் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அடங்குவர். பயனர்கள் தங்கள் ஜூம் பாஸ்வேட்களை மாற்றுவது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு தளத்திற்கும் தனிப்பட்ட பாஸ்வேட்களைப் பயன்படுத்த வேண்டும்.

பயனர்கள் Cyble's AmIBreached / Have I Been Pwned சேவைக்குச் செல்வதன் மூலம் அவர்களின் மின்னஞ்சல் முகவரி கசிந்திருக்கிறதா என்று சரிபார்க்கலாம். மேலும், செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான் ஒரு லைவ்ஸ்ட்ரீமை நடத்தி பிரச்சினைகளை ஒப்புக் கொண்டு, அவற்றை சரிசெய்ய நிறுவனம் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.


Mi TV 4X vs Vu Cinema TV: Which is the best budget TV in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Neo 11 Ultra அறிமுக தேதி அறிவிக்கப்பட்டது; முக்கிய சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாயின
  2. Redmi K100 அறிமுகத்திற்கு முன் K110-க்கு பதிலாக K200 சீரிஸ் வரக்கூடும்: Redmi அதிகாரி தகவல்
  3. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  4. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
  5. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  6. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  8. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  9. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  10. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »