இந்த ஜொமாட்டோ சேவையை புதிதாக பெறும் 100 நகரங்களில், புஜ், ஜுனகத், ரிஷிகேஷ், சிம்லா, அயோத்யா, பெகுசராய் ஆகிய நகரங்கள் அடங்கும்.
தனக்கு விருப்பமான உணவுகளை விருப்பமான உணவகங்களில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள உதவும் ஆன்லைன் தளமான ஜொமாட்டோ, தனது சேவையை புதிதாக 100 நகரங்களுக்கு நீட்டித்துள்ளது. திங்கட்கிழமையன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய அறிவிப்பின் மூலம், 300 நகரங்களில் ஜொமாட்டோ சேவை என்ற எண்ணை தொட்டுள்ளது இந்த நிறுவனம்.
இந்த ஜொமாட்டோ சேவையை புதிதாக பெறும் 100 நகரங்களில், புஜ், ஜுனகத், ரிஷிகேஷ், சிம்லா, அயோத்யா, பெகுசராய் ஆகிய நகரங்கள் அடங்கும்.
300 நகரங்களில் சேவை என்ற உச்சத்தை தொட்ட ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மோஹித் குப்தா கூறுகையில்,"இந்தியாவிலுள்ள நகரங்களில், மொத்தம் 40 நகரங்கள் 10 லட்சத்திற்கும் மேலான மக்கள்தொகையை கொண்டுள்ளது, 380 நகரங்கள் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள்தொகையை கொண்டுள்ளது. இந்த 40 நகரங்களை கடந்து அந்த 380 நகரங்களை எட்டும்போது, நீங்கள் உண்மையாகவே இந்தியாவிற்கான நிறுவனமாக மாறுகிறீர்கள். மேலும், எங்கள் தற்போதைய சராசரி டெலிவரி நேரமான 30.5 நிமிடங்களை மேம்படுத்தும் நோக்கிலும் எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.", என்றார்.
குப்தாவின் அறிவிப்பின்படி, இந்த சேவை நீட்டிப்பில் பஞ்சாப் மற்றும் ஆந்திரா மாநிலங்களே அதிக கவணத்தை பெற்றுள்ளது. அங்குள்ள நகரங்களில் தான் அதிகமாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நகரங்களிலும் 40 முதல் 50 உணவகங்களை, தங்கள் சேவையில் இணைத்துள்ளது.
முதலில் 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 70 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. மேலும், 24 நாடுகளில் 1.4 மில்லியன் உணவகங்களை தன் நிறுவனத்தில் இணைத்து வைத்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications