டிக்டாக்கில் பதிவிடப்படும் 15 முதல் 30 வினாடி வரையிலான வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த மாடலில் தனது யூசர்சுக்கு ஆப்சன் வைக்கலாமா என யூ டியூப் ஆய்வை தொடங்கியுள்ளது.
முதலில் இந்த ஆப்சன், குறைந்த அளவு யூசர்சுக்கு மட்டும் வழங்கப்படும். பின்னாளில் இந்த முறை விரிவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனை வெற்றி பெற்றால், இனி அனைவரும் யூ டியூபில் டிக்டாக்கைப்போல குட்டி வீடியோக்களை பதிவிடலாம்.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரலின்போது YouTube Shorts என்ற பெயரில் சிறிய விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
யூசர்ஸ் பதிவு செய்து அப்லோட் செய்யும் வீடியோ 15 வினாடிகளுக்குள் இருந்தால் அது நேரடியாக யூ டியூபில் அப்லோட் ஆகி விடும். 15 வினாடிகளுக்கு மேல் இருந்தால் வீடியோக்கள் முதலில் மொபைல் கேலரிக்கு சென்று விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் டிக்டாக்கைப் போன்று ஃபில்டர், மியூசிக், வீடியோ எபெக்ட்ஸ் உள்ளிட்டவை இருக்குமா என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
பேஸ்புக்கும் டிக்டாக்கிற்கு போட்டி கொடுக்கும் வகையில் சில ஆப்சன்களை மாற்றப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Collab என்ற ஆப்பை பேஸ்புக் சோதனை முயற்சியில் ஈடுபடுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்தி பேஸ்புக் பயனர்கள் சிறிய வீடியோக்களை வெளியிட முடியும்.
மொத்தத்தில் யூ டியுபும், பேஸ்புக்கும் டிக்டாக்கிற்கு போட்டி கொடுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டன. இதனை டிக் டாக் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்