ஆண்டிராய்ட் மொபைல் போன்களின் யூடியுப் செயலியில் dark mode என்னும் புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது
ஆண்டிராய்ட் மொபைல் போன்களின் யூடியுப் செயலியில் dark mode என்னும் புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டே மேசைக் கணினிகளில் முதன்முதலாக அறிமுகமான இவ்வசதி, நான்கு மாதங்களுக்கு முன்பு ஐபோன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய வசதியால் போனின் இடைமுகம் முழுவதும் கருப்பாக மாறும். இதனால் கண்களுக்கு ஏற்படும் (குறிப்பாக இரவு நேரங்களில் பயன்படுத்துகையில்) பாதிப்புகள் குறையும்.
இதனை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது?
ஆண்ட்ரய்ட் Youtube பயனர்கள், செயலியின் செட்டிங்ஸ் மெனுவுக்குள் சென்று, general என்ற தேர்வை க்ளிக் செய்யவேண்டும். Dark Theme வசதி Digital Wellbeing என்னும் பிரிவினுள், Remind me to take a break ஆப்சனின் கீழே இருக்கும்.
கண்களுக்கு ஏற்படும் வலியைக் குறைப்பதோடு டார்க் மோட் வசதி வீடியோக்களைப் பார்ப்பதில் நல்ல அனுபவத்தையும் வழங்கும். பேட்டரி பயன்பாட்டையும் குறைக்கும்.
இதுபோக வீடியோ தலைப்புகளுடன் ஹாஷ்டேகுகளை இணைக்கும் வசதியையும் யூடியூப் அண்மைக்காலமாக வழங்கி வருகிறது. இதனால் தேடுதல் எளிமையடையும். மேலும் ஆப்பிள் போன்களில் டிரெண்டிங் பகுதிக்குப் பதிலாக எக்ஸ்ப்ளோர் என்னும் புதிய கீற்றினையும் (tab) அறிமுகம் செய்வதற்கான சோதனையில் கூகுள் ஈடுபட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999