யூட்யூப் நிறுவனம் தற்போது ‘இன்காக்னிட்டோ’ வசதியை தனது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் யூட்யூப்பில் நீங்கள் பார்க்கும் வீடியோக்களை ஹிஸ்டரியில் இடம் பெறாமல் செய்ய முடியும்.
தற்போது இருக்கும் ‘சைன் அவுட்’ ஆப்சன் பட்டனுக்கு அருகில், ‘இன்காக்னிட்டோ’ வசதியை யூட்யூப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியைப் பெற உங்களது மொபைல் போனில் லேட்டஸ்ட் யூட்யூப் ஆப் இருக்க வேண்டும்.
உங்களது பிரெளசரில் கூகுள் குரோமில் இருக்கும் ‘இன்காக்னிட்டோ’ வசதியை ஆன் செய்வதன் மூலம், உங்களது ப்ரெளசர் ஹிஸ்டரி பதிவாகாமல் நீங்கள் ப்ரவுஸ் செய்ய முடியும். அதுபோல, இனிமேல் யூட்யூப்பிலும் நீங்கள் வீடியோவை பார்க்க முடியும்.
இதன் மூலம், நீங்கள் தேடும் தகவல்களையும், பார்க்கும் வீடியோக்கள் குறித்து எந்த தகவல்களையும் யூட்யூப் சேமிக்க இயலாது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்