வாட்ஸ்அப்பின் பயன்பாடு ஆரம்ப கட்டத்தில் 27 சதவீதத்திலிருந்து தொற்றுநோயின் நடுப்பகுதியில் 41 சதவீதமாக வளர்ந்தது.
வாட்ஸ்அப் மற்ற சமூக ஊடக செயலிகளின் பயன்பாட்டில் "மிகப்பெரிய லாபங்களை" பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது
கோவிட்-19 பரவல் காரணமாக வாட்ஸ்அப் பயன்பாடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சந்தை ஆய்வின் அடிப்படையில் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி செய்தியிடல் செயலி பிற சமூக ஊடக செயலிகளுக்கிடையேயான பயன்பாட்டில் “மிகப் பெரிய லாபங்களை” பெற்றிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் 27 சதவீதம் அதிகரிப்பு காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் போது ஒட்டுமொத்த சமூக ஊடக செயலியின் பயன்பாடு, சாதாரண பயன்பாட்டு விகிதங்களை விட 61 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், Web browsing 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அதைத் தொடர்ந்து பாரம்பரிய தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆலோசனை நிறுவனமான காந்தர் மார்ச் 14 முதல் 24 வரை 30 சந்தைகளில் 25,000-க்கும் மேற்பட்ட நுகர்வோர் மீது கணக்கெடுப்பை நடத்தியது, இது coronavirus வைரஸ் தொற்று காலத்தில் WhatsApp-ன் வெற்றியைக் காட்டுகிறது. செயலியின் பயன்பாடு ஆரம்ப கட்டத்தில் 27 சதவீதத்திலிருந்து தொற்றுநோயின் நடுப்பகுதியில் 41 சதவீதமாக வளர்ந்தது. தொற்றிற்கு பின்னர் கட்டத்தில் இருந்த நாடுகளுக்கு, வாட்ஸ்அப் பயன்பாடு 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் செலவழித்த நேரமும் சில சந்தைகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. தொற்றுநோய்களின் போது செயலியில் 76 சதவிகித அதிகரிப்பு நேரம் காணப்பட்டதாக அந்த அறிக்கை ஸ்பெயினை எடுத்துக்காட்டுகிறது.
வாட்ஸ்அப்பைத் தவிர, ஒட்டுமொத்த Facebook பயன்பாடும் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்து மெசேஜிங் செயலிகளிலும் பயன்பாட்டின் வளர்ச்சி, 18-34 வயதுக்குட்பட்டவர்களில் மிகப்பெரியது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் Instagram அனைத்தும் 35 வயதிற்குட்பட்டவர்களிடமிருந்து 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பயன்பாட்டைக் கண்டுள்ளன. மேலும், கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது, WeChat மற்றும் Weibo உள்ளிட்ட உள்ளூர் சமூக ஊடக செயலிகளின் பயன்பாட்டில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரபலமாக இருந்தபோதிலும், சமூக ஊடக செயலிகள் பல பயனர்களுக்கான சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான நம்பகமான ஆதாரமாக இல்லை என்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. அதற்கு பதிலாக, பாரம்பரிய செய்தி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்கள் 52 சதவிகித மக்களுக்கு "நம்பகமான" ஆதாரமாக இன்னும் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதே நேரத்தில் கணக்கெடுப்பு அளவுகளில் 11 சதவிகிதம் மட்டுமே சமூக ஊடக தளங்களை நம்பகமான தகவல்களின் ஆதாரமாகக் கண்டறிந்துள்ளது.
"அரசாங்க நிறுவன வலைத்தளங்கள், 48 சதவிகித மக்களால் மட்டுமே நம்பகமானவையாகக் கருதப்படுகின்றன, அரசாங்க நடவடிக்கைகள் உலகெங்கிலும் உள்ள குடிமக்களுக்கு உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பை வழங்கவில்லை என்று தெரிவிக்கின்றன" என்று அறிக்கை கூறியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், பேஸ்புக் தனது உள் தரவுகளையும் வெளியிட்டது, இது Facebook Messenger மற்றும் வாட்ஸ்அப் இரண்டிலும் பயன்பாட்டை இரட்டிப்பாக்கியது. கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட மென்லோ பார்க் நிறுவனம், ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவை அடைந்ததிலிருந்து அதன் அனைத்து செயலிகளில்உம் 70 சதவிகிதம் அதிக நேரம் செலவழித்ததாகக் கூறியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R