வாட்ஸ்அப் வீடியோ ஸ்டேட்டஸ்க்கு கட்டுப்பாடு! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 மார்ச் 2020 12:57 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் வாட்ஸ்அப்பின் 15-வினாடி வீடியோ ஸ்லாட் இப்போது கிடைக்கிறது
  • இந்த வரம்பு சமீபத்திய பீட்டா மற்றும் நிலையான உருவாக்கங்களில் உள்ளது
  • வாட்ஸ்அப், வலைப்பதிவு / செய்தி வெளியீடு மூலம் மாற்றத்தை உறுதிப்படுத்தவில்

பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸை பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோவின் 15 வினாடி பகுதியைக் குறிப்பிடலாம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைனுக்கு வருவேரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை, வாட்ஸ்அப் ஏற்கனவே முந்தைய அறிக்கையில் கூறியிருந்தது. அந்த செய்திக் குறிப்பில், இந்த ஊரடங்கு காலத்தில், சுமார் 40 சதவீத கூடுதல் பயனர்களை கொண்டுள்ளதாக கூறியுள்ளது. தற்போது, ஸ்டேட்டஸில் 15 வினாடிகளுக்கு மேல் வீடியோக்களை பதிவிட முடியாது என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.

இப்போது, ​​நீங்கள் வாட்ஸ்அப்பில் 15 வினாடிகளுக்கு மேல் நீளமுள்ள வீடியோவைப் பதிவேற்றும் போது", ஸ்டேட்ஸ் வீடியோக்கள் 15 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது" என்று செயலி உடனடியாக உங்களுக்கு தெரியபடுத்தும்.

பயனர்கள் எந்த 15 விநாடிகளின் வீடியோவை அவர்கள் ஸ்டேட்டஸாக பகிர விரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிடலாம்.

நீங்கள் பதிவேற்ற விரும்பும் வீடியோவின் 15-வினாடி பகுதியைத் தேர்ந்தெடுக்க, செவ்வக தேடல் பெட்டியை (rectangular seek box) பிரேம்களுக்கு மேல் ஸ்லைட் செய்யுங்கள். அதைச் செய்தவுடன், 15 விநாடிகளின் கிளிப் உங்கள் WhatsApp ஸ்டேட்டஸில் பகிரப்படும். இந்த இந்த அம்சம் தற்போது இந்தியாவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

சர்வர் உள்கட்டமைப்பில் லோடை குறைக்கவே தற்போது, ஸ்டேட்டஸ் வீடியோ நேரம் 15-வினாடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. வாட்ஸ்அப், வலைப்பதிவு அல்லது செய்தி வெளியீடு மூலமாகவோ இந்த மாற்றத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, Coronavirus, WhatsApp Status
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.