சர்வர் உள்கட்டமைப்பில் லோடை குறைக்கவே தற்போது, ஸ்டேட்டஸ் வீடியோ நேரம் 15-வினாடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸை பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோவின் 15 வினாடி பகுதியைக் குறிப்பிடலாம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைனுக்கு வருவேரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை, வாட்ஸ்அப் ஏற்கனவே முந்தைய அறிக்கையில் கூறியிருந்தது. அந்த செய்திக் குறிப்பில், இந்த ஊரடங்கு காலத்தில், சுமார் 40 சதவீத கூடுதல் பயனர்களை கொண்டுள்ளதாக கூறியுள்ளது. தற்போது, ஸ்டேட்டஸில் 15 வினாடிகளுக்கு மேல் வீடியோக்களை பதிவிட முடியாது என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.
இப்போது, நீங்கள் வாட்ஸ்அப்பில் 15 வினாடிகளுக்கு மேல் நீளமுள்ள வீடியோவைப் பதிவேற்றும் போது", ஸ்டேட்ஸ் வீடியோக்கள் 15 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது" என்று செயலி உடனடியாக உங்களுக்கு தெரியபடுத்தும்.
![]()
நீங்கள் பதிவேற்ற விரும்பும் வீடியோவின் 15-வினாடி பகுதியைத் தேர்ந்தெடுக்க, செவ்வக தேடல் பெட்டியை (rectangular seek box) பிரேம்களுக்கு மேல் ஸ்லைட் செய்யுங்கள். அதைச் செய்தவுடன், 15 விநாடிகளின் கிளிப் உங்கள் WhatsApp ஸ்டேட்டஸில் பகிரப்படும். இந்த இந்த அம்சம் தற்போது இந்தியாவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
சர்வர் உள்கட்டமைப்பில் லோடை குறைக்கவே தற்போது, ஸ்டேட்டஸ் வீடியோ நேரம் 15-வினாடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. வாட்ஸ்அப், வலைப்பதிவு அல்லது செய்தி வெளியீடு மூலமாகவோ இந்த மாற்றத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999