WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், 'Group Message History' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு குரூப்பில் புதிதாக சேரும் நபர், அவர் சேருவதற்கு முன்பு வந்த மெசேஜ்களை பார்க்க முடியும்.

WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க!  பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்

Photo Credit: Whatsapp

இந்த அம்சம் தனியுரிமையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்
  • சேரும் புதியவர்கள் முந்தைய 24 மணிநேர மெசேஜ்களை படிக்கலாம்.
  • 25 முதல் 100 மெசேஜ்கள் வரை பகிரும் வசதியை நிர்வாகி (Admin) பெறுகிறார்.
  • பழைய மெசேஜ்களுக்கும் End-to-End Encryption பாதுகாப்பு உண்டு.
விளம்பரம்

வாட்ஸ்அப் யூஸ் பண்ணாத ஆளே இன்னைக்கு இல்லைன்னு சொல்லலாம். அதுலயும் குரூப் சாட் பண்றது ஒரு தனி ஜாலி தான். ஆனா இதுல ஒரு பெரிய கடுப்பான விஷயம் என்னன்னா, ஒரு குரூப்ல நம்மள புதுசா சேர்க்கும்போது, அதுக்கு முன்னாடி அங்க என்ன பேசுனாங்கன்னு நமக்குத் தெரியாது. "ஏதாவது முக்கியமான விஷயம் சொல்லிருக்காங்களோ?" இல்ல "நம்மள பத்தி எதாவது தப்பா பேசிருப்பாங்களோ?"னு மண்டைய பிச்சுகிட்டு இருப்போம். ஆனா இனி அந்த கவலைக்கு இடமே இல்லை! ஏன்னா, WhatsApp இப்போ ஒரு மரண மாஸ் அப்டேட்டை இறக்கியிருக்காங்க. பொதுவா டெலிகிராம் (Telegram) போன்ற ஆப்ஸ்ல இருக்குற இந்த வசதி, இப்போதான் வாட்ஸ்அப்புக்கு வந்திருக்கு. இந்த அம்சத்தோட பேரு 'Group Message History'. அதாவது, ஒரு குரூப்ல ஒருத்தரை ஆட் பண்ணும்போது, அவங்களுக்கு முந்தைய உரையாடல்களைப் பார்க்க அனுமதி தரலாமா வேணாமானு அட்மின் முடிவு பண்ணலாம். இதனால அந்த புது மெம்பர் குரூப்ல ஏற்கனவே என்ன விவாதம் போயிட்டு இருக்குன்னு ஈஸியா புரிஞ்சுக்குவாங்க.

எத்தனை மெசேஜ்களைப் பார்க்கலாம்?

வாட்ஸ்அப் இப்போ கொடுத்திருக்கிற தகவல்படி, ஒரு புதிய உறுப்பினர் குரூப்பில் இணைந்தவுடன் கடந்த 24 மணிநேரத்தில் வந்த மெசேஜ்களைப் பார்க்க முடியும். இதுல இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா, அட்மின்கள் அல்லது குரூப் மெம்பர்கள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 100 மெசேஜ்கள் வரை அந்தப் புதிய நபருக்கு ஷேர் பண்ண முடியும். இதனால பழைய ஸ்கிரீன்ஷாட்களை எடுத்து அனுப்ப வேண்டிய அவசியம் இனி அட்மின்களுக்கு இருக்காது.

யாருக்கு இந்த அதிகாரம்?

இந்த வசதியை ஆன் பண்றதுக்கும் ஆஃப் பண்றதுக்கும் முழு அதிகாரம் குரூப் அட்மின்களுக்கே (Admins) வழங்கப்பட்டுள்ளது. அவங்க குரூப் செட்டிங்ஸ்ல போய் 'Share message history' அப்படிங்கிற ஆப்ஷனை எனேபிள் பண்ணா மட்டும்தான் புதுசா வர்றவங்களுக்குப் பழைய மெசேஜ்கள் தெரியும். ஒருவேளை அட்மின் அதை ஆஃப் பண்ணி வச்சிருந்தா, வழக்கம் போல நீங்க குரூப்ல சேர்ந்ததுக்கு அப்புறம் வர்ற மெசேஜ்களை மட்டும்தான் பார்க்க முடியும்.

பாதுகாப்பு முக்கியம் பிகிலு

பழைய மெசேஜை பார்க்க முடியுதுன்னா எங்க பிரைவசி என்ன ஆகுறது?"னு நீங்க கேக்குறது புரியுது. வாட்ஸ்அப் இதுல ரொம்ப தெளிவா இருக்காங்க. இந்த ஷேர் பண்ணப்படுற பழைய மெசேஜ்களும் End-to-End Encryption முறையில தான் பாதுகாக்கப்படும். அதாவது அந்த குரூப்ல இருக்குறவங்களைத் தவிர வேற யாராலயும் (வாட்ஸ்அப் நிறுவனத்தால கூட) அந்த மெசேஜ்களைப் படிக்க முடியாது. அதேபோல, ஒருத்தருக்கு பழைய மெசேஜ் ஷேர் பண்ணப்பட்டா, அது குரூப்ல இருக்குற மத்த எல்லாருக்கும் ஒரு நோட்டிபிகேஷன் மூலமா தெரியப்படுத்தப்படும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

1.    முதல்ல உங்க வாட்ஸ்அப் அப்பை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் பண்ணிக்கோங்க.
2.    நீங்க ஒரு குரூப் அட்மினா இருந்தா, அந்த குரூப் இன்போ (Group Info) பக்கத்துக்குப் போங்க.
3.    அங்க 'Group Settings' ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.
4.    அதுல 'Recent Message History' அப்படிங்கிற பட்டனை ஆன் பண்ணிக்கோங்க.
5.    அவ்வளவுதான்! இனி நீங்க புது மெம்பர்ஸை ஆட் பண்ணும்போது அவங்களுக்குப் பழைய மெசேஜ்கள் தானா வந்துரும்.
 

ஆபீஸ் குரூப், காலேஜ் குரூப், ஃபேமிலி குரூப்னு எல்லா இடத்துலயும் இந்த அம்சம் ரொம்ப பயனுள்ளதா இருக்கும். ஒருத்தரை சேர்த்ததுக்கு அப்புறம் மறுபடியும் முதல்ல இருந்து கதையை சொல்ல வேண்டிய அவசியம் அட்மின்களுக்கு இனி இல்லை. 2026 பிப்ரவரி மாசத்துல வெளியாகியிருக்கிற இந்த அப்டேட் இப்போ ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்குப் படிப்படியாக வந்துட்டு இருக்கு. என்ன நண்பர்களே, இந்த வாட்ஸ்அப் அப்டேட் உங்களுக்குப் பயனுள்ளதா இருக்குமா? உங்க குரூப்ல இருக்குற அட்மின்கிட்ட இதைச் சொல்லி எனேபிள் பண்ண சொல்லுங்க.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

#சமீபத்திய செய்திகள்
  1. சாட்ஜிபிடியில் விரைவில் தனிப்பயன் ஷேர் ஷீட், ஃபைல் பிக்கர் உள்ளிட்ட பல UI மாற்றங்கள் அறிமுகம்
  2. ஆப்பிள் கார்பிளேயில் சாட்ஜிபிடி அறிமுகம்; ஆனால் நேவிகேஷன் மற்றும் நேரலை இருப்பிடத் தகவலை அணுக முடியாது.
  3. ஆப்பிள் 50வது ஆண்டு விற்பனை: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,02,900 விலையில்; ஐபேட், வாட்ச் மாடல்களுக்கும் சலுகைகள்
  4. ஒன்பிளஸ் நார்டு 6 (OnePlus Nord 6) - முதல் பார்வை
  5. ஒப்போ F33, ஒப்போ F33 ப்ரோ அறிமுகக் காலம் மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளன
  6. ஏப்ரல் மாத பிஎஸ் பிளஸில் லார்ட்ஸ் ஆஃப் தி ஃபாலன்,டோம்ப் ரைடர் மற்றும் ஸ்வார்ட் ஆர்ட் ஆன்லைன் கேம்கள் இணைகின்றன.
  7. கூகுள் AI ப்ரோ திட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி 5TB கிளவுட் ஸ்டோரேஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  8. DarkSword பாதிப்பை சரிசெய்ய, iOS 18-ல் இயங்கும் பழைய ஐபோன்களுக்கு ஆப்பிள் அவசர அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
  9. ரெட்மி நோட் 15 SE 5G இந்தியாவில் அறிமுகம்: 5,800mAh பேட்டரி, வேகன் லெதர் ஃபினிஷ்: விலை, சிறப்பம்சங்கள்
  10. Realme 16 5G இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா: விலை, சிறப்பம்சங்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »