இந்திய அரசு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் நாடு தழுவிய வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ் சேவை அறிமுகத்தை பயனர்களின் தகவல் சேமிப்பு மற்றும் இதர காரணங்களுக்காக தற்காலிமாக நிறுத்திவைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், 'வாட்ஸ் ஆப் மற்றும் அதன் கூட்டு வங்கிகளிடம் இது சம்பந்தமாக தகவல்களைக் கேட்டுள்ளது, என அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொழில்துறை பேமண்ட்ஸ் மேற்பார்வையாளரான இந்திய தேசிய பேமண்ட்ஸ் நிறுவனத்திடம் (என்.பி.சி.ஐ), வாட்ஸ் ஆப்பின் தேவைகளுக்கு இணக்கமாக இருக்க அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
'இந்திய அரசு, என்.பி.சி.ஐ மற்றும் எங்களுடைய பேமண்ட்ஸ் சேவை வழங்குவர் உள்ளிட்ட பல வங்கிகளுடன் இணைந்து மேலும் பல மக்களுக்கு இந்த சேவையை விரிவாக்க நாங்கள் வேலை செய்து வருகிறோம்', என வாட்ஸ் ஆப் செய்தி தொடர்பாளர் ஆன் யே தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சேவையின் நாடு தழுவிய அறிமுகத்திற்கான கால அளவை பற்றி கூற மறுத்துவிட்டார். என்.பி.சி.ஐ தலைமை நிர்வாக அதிகாரி திலிப் அஸ்பே இதுப்பற்றி கருத்துகூற மறுத்துவிட்டார்.
நாட்டில் நடைபெற்று வரும் வன்முறைகள் மீதான சர்ச்சையில் வாட்ஸ் ஆப் சிக்கியுள்ள நேரத்தில் இந்த தாமதம் வந்துள்ளது. குழந்தை கடத்தல் பற்றி வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கிராமப்புரங்களில் வைரலாக பகிரப்படுவதால் சில கும்பல்களால் 20-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையை தூண்டிவிடும் செயல்கள் மீது நிறுவனம் நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், வாட்ஸ் ஆப் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது. அமைச்சகத்தின் அறிக்கை மீது கருத்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் மறுத்துவிட்டது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒப்புதல் பெறுவதில் என்ன பிரச்சனை நிலவுகிறது என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. புதிய விதிகளின் படி, இந்திய மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) பேமண்ட்ஸ் சேவை வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் தனியுரிமையை பாதுகாக்கும் பொருட்டு உள்ளூர் செர்வர்களில் சேமித்து வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. இந்த தாமதம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, உள்ளூர் சேவையான பே டி.எம் மற்றும் உலகளாவிய சேவை நிறுவனங்களான கூகுளின் டெஸ் மற்றும் ஸ்வீடனின் ட்ரூ காலர் ஆகிய நிறுவனங்களுடனான போட்டியில் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
"போட்டி நிறுவனங்களுக்கு இது சாதகமாக அமையும், மேலும் தாமதத்தால் வாட்ஸ் ஆப் நிறுவனம் அதன் பயனர்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்களை பயன்படுத்திக் கொள்வதை தவறவிடும்" என்கிறார் ஃபாரஸ்டர் நிறுவன ஆராய்ச்சியாளர் அர்னாவ் குப்தா. "எவ்வளவு வேகமாக அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்களோ, அதைப் பொருத்து அவர்கள் பயனர்களின் கருத்துகளைக் கேட்டு மேலும் மேம்படுத்திக்கொள்ளலாம்"
கிசுகிசுக்கள் மற்றும் வைரலான வீடியோக்கள் பகிர பயன்படும் வாட்ஸ்ஆப் சேவை மற்றும் அதில் உள்ள க்ரூப் சேவைகள் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின. 230 மில்லியன் பயனர்களுடன் உலகளவில் வாட்ஸ் ஆப்பின் மிகப்பெரிய சந்தையாக உருமாறியுள்ளது இந்தியா. பிப்ரவரி மாதம் அதன் பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்ட பேமண்ட்ஸ் பிசினஸ் சேவையை இதுவரை 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
வாட்ஸ்ஆப் இந்த சேவையை ஜூன் மாதம் முதல் தேசிய அளவில் விரிவுபடுத்தப்போவதாக, ப்ளூம்பெர்க் மே மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
வாட்ஸ்ஆப் டிஜிட்டல் பேமண்ட்ஸ் சேவை, ஃபேஸ்புக்குடன் தொடர்புள்ள அதன் அதிக பயனாளர்கள் எண்ணிக்கை ஆகியவை போட்டியாளர்களுக்கு சவாலாக இருக்கிறது. இது சீனாவின் வீசாட் போன்று வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீசாட் நிறுவனமும் லட்சக்கணக்கான பயனர்களை இந்த பேமண்ட்ஸ் சேவையில் ஈர்த்து மொபைல் வர்த்தக துறையில் முக்கிய நிறுவனமாக உருமாறியுள்ளது. பே டிஎம் நிறுவனர் விஜய் சேகர் பாதுகாப்பு தேவைகளை மீறி பயனர்களின் தகவல்கள் அடங்கிய தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய தொகுப்பை உருவாக்க இருப்பதாக ஃபேஸ்புக் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்