Photo Credit: WABetaInfo
உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை தாண்டியுள்ளது. வாட்ஸ்அப்பில், சமீப காலமாக அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அதிலும் இப்போது மல்டி-டிவைஸ் ஆதரவை கொண்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் , கடந்த ஆண்டு நவம்பரில் ஐபோனுக்கான வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பில் காணப்பட்டது. வாட்ஸ்அப்பின் மல்டி-பிளாட்ஃபார்ம் பயன்முறை பயனர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும். பயனர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் அவர்களின் கணக்கை பயன்படுத்தலாம். இந்த அம்சம் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் வெகு விரைவில் கிடைக்கவுள்ளது.
மல்டி பிளாட்பார்ம் அம்சம், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் v2.20.110 பீட்டாவில் காணப்பட்டது. ஆனால், இந்த அம்சம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. வாட்ஸ்அப் பயனர்கள், புதிய சாதனத்தில் காண்டேக்டை சேர்த்திருந்தால், chat-ல் உள்ளவர்களுக்கு அந்த அறிவிப்பு வெளியாகும்.
WhatsApp பீட்டா, automatically delete messages-ஐ இயக்கும் அம்சத்தையும் வழங்குகிறது. இந்த அம்சம், individual chats-ல் இருவருமே இதை பயன்படுத்தலாம். இவை முன்னதாக Disappearing Messages அல்லது Delete Messages என்று அழைக்கப்பட்டு வந்த அம்சம், தற்போது Expiring Messages என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சம், group chats-ன் admin மட்டுமே அணுக முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்