பல சாதனங்களில் உள்நுழைய, புதிய அம்சங்களுடன் வருகிறது வாட்ஸ்அப்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
பல சாதனங்களில் உள்நுழைய, புதிய அம்சங்களுடன் வருகிறது வாட்ஸ்அப்!

Photo Credit: Wabetainfo

வாட்ஸ்அப் பதிப்பு 2.20.143 பீட்டாவில் பல சாதன அம்சத்துடன் தொடர்புடைய சரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது

ஹைலைட்ஸ்
 • வாட்ஸ்அப் multi-device ஆதரவை சோதித்து வருவதாக கூறப்படுகிறது
 • செயலியின் சமீபத்திய பீட்டா பதிப்பில் இது காணப்பட்டது
 • ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பதிப்பு 2.20.143 பீட்டா இப்போது கிடைக்கிறது

வாட்ஸ்அப் என்பது உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியாகும். கடந்த சில ஆண்டுகளில் வழக்கமான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும், அமெரிக்க நிறுவனம் இந்த செய்தியிடல் செயலியில் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது. இப்போது பல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தலாம். புதிய அம்சத்துடன் அந்த சாதனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனில் உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் உள்நுழைந்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே எண்ணைக் கொண்ட மற்றொரு தொலைபேசியில் உள்நுழைவதற்கு முன் முதல் தொலைபேசியிலிருந்து வெளியேறுவது கட்டாயமாகும். இருப்பினும், புதிய அம்சம், ஒரே நேரத்தில் பல ஸ்மார்ட்போன்களிலிருந்து ஒரே கணக்கில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த அனுமதிக்கும்.

WABetaInfo இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மெசேஜிங் நிறுவனம் 2019 முதல் இந்த அம்சத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் புதிய அம்சம் மீண்டும் காணப்பட்டது. மற்றொரு சாதனத்திலிருந்து அதே கணக்கில் உள்நுழையும் ஆப்ஷனை சேர்த்தது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ஒன்பிளஸ் 8-ன் அடுத்த விற்பனை ஜூன் 4 ஆம் தேதி தொடங்குகிறது!
 2. நோக்கியாவின் மூன்று புதிய போன்கள் அறிமுகம்!
 3. இன்பினிக்ஸ்-ன் இரண்டு ஸ்மார்ட்போன்கள் நான்கு பின்புற கேமராக்களுடன் அறிமுகம்!
 4. விவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன!
 5. பிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்!
 6. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்?
 7. 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா!
 8. சாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது!
 9. 20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex!
 10. ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com