குரூப் ஆடியோ அல்லது வீடியோ காலிங்கில் நான்கு பங்கேற்பாளர்களை மட்டுமே வாட்ஸ்அப் தற்போது அனுமதிக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வாட்ஸ்அப் குரூப் காலிங் மட்டுப்படுத்தப்பட்டதாக உணர்கின்றன
சமூக வலைதள செயலிகளில் ஒன்றான WhatsApp, தற்போது வரை நான்கு பயனர்களை மட்டுமே குரூப் காலிங்கில் அனுமதிக்கிறது. பயனர்களை அதிகரிக்கும் முயற்சியில் வாட்ஸ்அப் மும்முரமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதனால், உறவினர்கள், நண்பர்களுடன் உரையாட ஜூம் மற்றும் கூகிள் டியோ போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலிகள், ஒரே நேரத்தில் 12 நபர்களுடன் வீடியோ காலிங்கில் இணைக்க அனுமதிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்அப்பும், அதிக நபர்களை சேர்ப்பதற்கான அம்சத்தில் தீவிரம் காட்டிவருகிறது.
How to Make Group Calls With WhatsApp on Android, iPhone
இந்த அம்சம் முன்பு iOS-க்கான WhatsApp v2.20.50.23 பீட்டாவில் காணப்பட்டது. ஆண்ட்ராய்டுக்கான WhatsApp v2.20.128 பீட்டா மற்றும் WhatsApp v2.20.129 பீட்டாவில் கண்டுபிடித்த புதிய அம்சங்களை WABetaInfo பகிர்ந்துள்ளது.
WhatsApp v2.20.128 பீட்டாவில் நீட்டிக்கப்பட்ட Group Call Limit-ஐக் குறிக்கும் சரங்கள் உள்ளன. WhatsApp v2.20.129 பீட்டாவில் புதிய Call Header-ஐக் கொண்டுவருகிறது. இது calls, end-to-end encryption உடன் பாதுகாக்கப்படுவதைத் தெரிவிக்கிறது. இந்த அம்சம் சில சிக்கல்களையும் கொண்டுவருகிறது என்று டிராக்கர் கூறுகிறது.
![]()
குரூப் காலிங் பங்கேற்பாளர்கள் அனைவரும் புதிய பங்கேற்பாளர் வரம்பை அனுபவிக்க வாட்ஸ்அப்பின் அப்டேட் பதிப்பாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் எப்போது வெளிவரும் என்பதில் எந்த தகவலும் இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features