forward message அளவு கணிசமாக அதிகரித்துள்ளதாக வாட்ஸ்அப் கூறியுள்ளது
யனர்கள் "மிகப்பெரியதாக" கருதப்படும் forward செய்திகள் அதிகரித்துள்ளது
போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த, வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு Chat-ல் ஒரு செய்தியை ஒருவருக்கு மட்டுமே forward செய்ய முடியும். இது, ஐந்து முறையில் இருந்து ஒரு முறையாக குறைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த நடவடிக்கை, கொரோனா வைரஸ் தொற்றை பற்றிய தவறான தகவல்களை பரப்புவதை குறைக்க உதவும். ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளை சரிபார்க்க, பயனர்களை அனுமதிக்க ஒரு அம்சத்தை வாட்ஸ்அப் கண்டறிந்தது.
வாட்ஸ்அப்பின் இந்த நடவடிக்கை, போலி செய்திகள் பரப்புவதை தடுக்கும் முயற்சியாகும். பயனர்கள் "மிகப்பெரியதாக" கருதப்படும் forward செய்திகள் அதிகரித்துள்ளதால், "தவறான தகவல் பரவலுக்கு காரணமாகும்" என்றும் நிறுவனம் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டது.
coronavirus காரணமாக, மக்கள் வீட்டிலேயே உள்ள நிலையில், வாட்ஸ்அப் பயன்பாடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 400 மில்லியன் பயனர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். இந்த செயலி பிற சமூக ஊடக செயலிகளில் பயன்பாட்டில் “மிகப்பெரிய லாபங்களை” பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டது.
புதிய அப்டேட் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு அனுப்புவதை கட்டுப்படுத்துவதாகும். இருப்பினும், அவர்கள் ஒரு செய்தியை copy செய்து பல்வேறு Chat-ன் textbox-ல் paste செய்யலாம். பல்வேறு பயனர்களுக்கு ஒரே செய்தியை அனுப்ப, பயனர்கள் பல முறை forward option-ஐ பயன்படுத்தலாம்.
WhatsApp-ன் முந்தைய மாற்றம் message forwards-ல் 25 சதவீதம் குறைவதற்கு வழிவகுத்தது. நெருங்கிய தொடர்பிலிருந்து (close contact) தோன்றாத செய்திகளை எளிதில் அடையாளம் காண, பயனர்களுக்கு உதவ, செய்தி செயலி கடந்த ஆண்டு ஆகஸ்டில் “Frequently Forwarded” செய்தி லேபிளைச் (label) சேர்த்தது.
கடந்த மாதம், ஆன்லைனில் தேடுவதன் மூலம் forwarded messages-ன் content-ஐ சரிபார்க்க பயனர்களை அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் சோதித்தது. சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் frequently forwarded messages-க்கு அடுத்ததாக magnifying glass icon கிடைக்கிறது. இது Web search மற்றும் செய்திகளின் நம்பகத்தன்மையை அறிய/சரிபார்க்க அனுமதிக்கிறது.
OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately