பேஸ்புக் பே சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மேலும், இது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சரில் பணம் அனுப்ப உங்களை அனுமதிக்கும்.
Photo Credit: WABetaInfo
WhatsApp iPhone செயலி புதிய பீட்டா அப்டேட்டைப் பெறுகிறது
வாட்ஸ்அப் (WhatsApp) இப்போது ஐபோன் பயனர்களுக்காக ஒரு புதிய பீட்டா புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், அம்சங்கள் டிராக்கர் WABetaInfo வளர்ச்சியில் உள்ள சில அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. அவற்றில் ஒன்று இந்த மாத தொடக்கத்தில் Android-ல் காணப்பட்ட தடுக்கப்பட்ட தொடர்பு அறிவிப்பு (Blocked Contact Notice) அம்சமாகும். இந்த அம்சம் இப்போது iOS செயலியிலும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், பேஸ்புக் பேவும் (Facebook Pay) அமலாக்கத்தின் கீழ் காணப்படுகிறது. விரைவில் வாட்ஸ்அப்பில் ஒருங்கிணைப்பதைக் குறிக்கிறது. பேஸ்புக் பே (Facebook Pay) சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மேலும் இது இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் மெசஞ்சரில் (Messenger) பணம் அனுப்ப உங்களை அனுமதிக்கும்.
ஐபோன் பீட்டாவிற்கான சமீபத்திய வாட்ஸ்அப் பதிப்பு எண் 2.19.120.21 உடன் வருகிறது. மேலும் பயனர்கள் புதிய அப்டேட்டுக்கு டெஸ்ட் ஃப்ளைட்டில் (TestFlight) சரிபார்க்க வேண்டும். இந்த அப்டேட்டில் WABetaInfo-ல் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு அம்சங்களும் வளர்ச்சியில் உள்ளன. இதன் பொருள் நீங்கள் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்தாலும் இந்த அம்சங்களை நீங்கள் காண முடியாது. ஏனென்றால், அவை இதுவரை சோதனைக்கு இயக்கப்பட்டிருக்கவில்லை. டிராக்கரால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அம்சம் தடுக்கப்பட்ட தொடர்பு அறிவிப்பு (Blocked Contact Notice) என்று அழைக்கப்படுகிறது. மேலும், நீங்கள் ஒரு தொடர்பைத் தடுத்தால் அல்லது தடைசெய்தால் இந்த அம்சம் chat-ல் காண்பிக்கப்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு தொடர்பைத் தடுக்கும்போது, chat அறிக்கையில் வாட்ஸ்அப் ஒரு குமிழியைச் சேர்க்கும் “நீங்கள் இந்த தொடர்பைத் தடுத்தீர்கள். தடைநீக்க டேட் செய்யவும்”. நீங்கள் ஒரு தொடர்பைத் தடைநீக்க முடிவு செய்தால் அது நிகழ்கிறது. இந்த குமிழி உங்கள் chat-ல் மட்டுமே சேர்க்கப்படும் என்று டிராக்கர் குறிப்பிடுகிறது. மேலும், நீங்கள் தடுத்த தொடர்பு அதைப் பற்றி அறிவிக்கப்படாது. இந்த அம்சம் Android பீட்டா 2.19.332 வளர்ச்சியின் கீழ் காணப்பட்டது. இப்போது iOS செயலியிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பேஸ்புக் பே (Facebook Pay) ஒருங்கிணைப்பு பற்றிய சில குறிப்புகள் வாட்ஸ்அப்பிற்குள் காணப்பட்டன. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.260-ல் காணப்பட்ட பின்னர், வாட்ஸ்அப் இறுதியாக iOS செயலியிலும் இந்த அம்சம் வேலை செய்கிறது. இந்த மாத தொடக்கத்தில் பேஸ்புக் பே (Facebook Pay) வெளியிடப்பட்டது. மேலும் இது மெசஞ்சர் (Messenger), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ்அப்பில் (WhatsApp) பண பரிவர்த்தனைகளை செய்ய உங்களை அனுமதிக்கும். மெசஞ்சர் (Messenger), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது பிரதான சமூக வலைதளங்களில் பணம் செலுத்துதல் அல்லது நன்கொடைகள் போன்ற பரிவர்த்தனைகள் இறுதியில் ஒரு ஒருங்கிணைந்த பேஸ்புக் கட்டண முறையால் (Facebook Pay system) கையாளப்படும். அதன் பொது பீட்டா அல்லது நிலையான வெளியீட்டில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show