புதிதாக வரவுள்ள எமோஜிகள், பயன்பாட்டில் இருக்கும் எமோஜி்களைக் காட்டிலும் சிறிது வித்தியாசப்படுகிறது.
புதிய எமோஜிகள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.197.6 இல் வெளிவந்துள்ளது
வாட்ஸ்அப்பில் புதிதாக 138 எமோஜிகளைக் சேர்ப்பதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. இந்த எமோஜிகள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.197.6 இல் வெளிவந்துள்ளது. அண்மையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு அனிமேட்டட் ஸ்டிக்கர்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது பீட்டா வெர்ஷனில் இந்தப் புதிய எமோஜிகள் காணப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப்பைப் பொறுத்தவரையில் எமோஜிகளும், ஸ்டிக்கர்களும் பயனர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பத்து வரி மெமேஜ்களைக் காட்டிலும் ஒரு எமோஜி போதுமானதாக அமைகிறது. புதிதாக வரவுள்ள எமோஜிகள், பயன்பாட்டில் இருக்கும் எமோஜிகளைக் காட்டிலும் சிறிது வித்தியாசப்படுகிறது. அதவாது, கலர் டோன், உடைகள், ஹேர் ஸ்டைல், தோல் நிறம் போன்றவை புதிய எமோஜிகளில் முற்றிலும் மாறுபடுகிறது.
![]()
வாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய எமோஜிகள்
Photo Credit: WABetaInfo
WABetaInfo என்ற இணையதளம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை கண்காணித்து, வாட்ஸ்அப் தொடர்பான புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்த இணையதளம்தான் தற்போது 2.20.197.6 பீட்டா வெர்ஷனில் வந்துள்ள புதிய எமோஜிகளைப் பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது. புதிய எமோஜிகளைப் பார்க்க விரும்பும் பயனர்கள், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை APK ஃபைலாக பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.
இதற்கு முன்பு கடந்த வாரம் வாட்ஸ்அப்பில் 'மியூட்' வசதியில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டது. அதாவது, ஒரு குழுவில் இருந்து வரும் மெசேஜ்களை, தனி நபரிடம் இருந்து வரும் மெசேஜ்களை ஆயுட் காலத்திற்கும் அதன் நோட்டிபிகேஷனை மியூட் செய்து கொள்ளலாம். அதே போல், மெசேஜ் எக்ஸ்பரி என்ற வசதியும் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வந்தன. இதன் மூலம் ஒரு மெசேஜை டைம் செட் செய்து அனுப்பலாம். அந்த நேரத்திற்குப் பின், குறிப்பிட்ட வாட்ஸ்அப் மெசேஜ் தானாகவே அழிந்துவிடும்.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Reveals 6 Radio Stations From GTA 6, Confirms Players Can Listen to Music on Foot in the Game
Amazon Alexa Tablet 8, Alexa Tablet 11, Alexa Tablet 12 Pro Launched With Google Play Store Integration: Price, Specifications
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs. 40,000 From Samsung, Redmi, OnePlus and More