ஆண்ட்ராய்டுக்கான, பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), இப்போது ஐந்து பில்லியன் பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது கூகிள் அல்லாத செயலியாகும் (non-Google app).
பெரிய அளவிலான இன்ஸ்டால்களை எட்டும் பெரும்பாலான ஆண்ட்ராய்டு செயலிகளைப் போலவே, இந்த எண்ணானது பிளே ஸ்டோரிலிருந்து (Play Store) பதிவிறக்கங்கள் மட்டும் இல்லை, ஆனால் சாம்சங் மற்றும் ஹவாய் போன்ற முன்பே நிறுவப்பட்ட பிரதிகள் கடந்த காலங்களில் சில ஸ்மார்ட்போன்களுடன் செயலியை தொகுத்துள்ளன என்று AndroidPolice தெரிவித்துள்ளது.
ஸ்டாடிஸ்டாவைப் (Statista) பொறுத்தவரை, வாட்ஸ்அப் உலகளவில் மிகவும் பிரபலமான உலகளாவிய மொபைல் மெசஞ்சர் செயலியாகும். இது, சுமார் 1.6 பில்லியன் monthly active users-ஐக் கொண்டுள்ளது. இது, 2019-ல் பேஸ்புக் மெசஞ்சரை (Facebook Messenger) 1.3 பில்லியனாகவும், வீசாட் (WeChat) 1.1 பில்லியன் பயனர்களாகவும் இருந்தது. பேஸ்புக் மற்றும் யூடியூப்பைத் (YouTube) தொடர்ந்து, இது உலகளவில் மூன்றாவது பிரபலமான சமூக வலைத்தளமாகும் .
கூகிள் பிளே ஸ்டோரைப் பொறுத்தவரை, வேகமாக வளர்ந்து வரும் வாட்ஸ்அப் சந்தையாக தென் கொரியா இருந்தது, மொபைல் மெசேஜிங் செயலியின் பதிவிறக்கங்கள், 2019-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 56 சதவீதம் அதிகரித்துள்ளன.
கூடுதலாக, கூகுள் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, மொபைல் செயலிகளின் சிறந்த வெளியீட்டாளராக பேஸ்புக்கை தேர்வு செய்யவில்லை.
2019-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், பேஸ்புக்கின் கிட்டத்தட்ட 800 மில்லியனுடன் ஒப்பிடும்போது, கூகுள் 850 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை சேகரித்துள்ளது என்று பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவர் (Sensor Tower) சமீபத்தில் வெளிப்படுத்தியது.
ஆண்டிற்கான ஒட்டுமொத்த பதிவிறக்கங்களைப் பொறுத்தவரை, கூகுள் இன்னும் பேஸ்புக்கிற்குப் பின்னால் செல்கிறது.
கூகுள் கிட்டத்தட்ட 2.3 பில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்றிருந்தாலும், பேஸ்புக் கடந்த 12 மாதங்களில் கிட்டத்தட்ட 3 பில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்றது.
உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட முதல் ஐந்து செயலிகளில், நான்கு பேஸ்புக் வைத்திருக்கிறது. இதில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவை ஆச்சரியமாக இல்லை.
பைட் டான்ஸுக்குச் (ByteDance) சொந்தமான வீடியோ பகிர்வு செயலியான டிக்டோக் (TikTok), 2019-ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டாவது செயலியாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்