Android-ல் Call Waiting அம்சம்! WhatsApp-ன் அடுத்த அப்டேட்!

பீட்டா மற்றும் நிலையான ஆண்ட்ராய்டு சேனல்களுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் (WhatsApp) அப்டேட், அழைப்பு காத்திருப்பு (call waiting) அம்சத்தைக் கொண்டுவருகிறது.

Android-ல் Call Waiting அம்சம்! WhatsApp-ன் அடுத்த அப்டேட்!

செயலியின் நிலையான மற்றும் பீட்டா உருவாக்கங்களில் WhatsApp-ன் call waiting அம்சம் கிடைக்கிறது

ஹைலைட்ஸ்
  • call waiting அம்சம் அழைப்பை நிறுத்தி வைப்பதில் இருந்து வேறுபடுகிறது
  • கால் திரையில் புதிய ‘End & Accept’ பொத்தானை இந்த அப்டேட் சேர்க்கிறது
  • Fingerprint lock மற்றும் new group privacy settings-ஐ WhatsApp பெறுகிறது
விளம்பரம்

வாட்ஸ்அப் (WhatsApp) தனது ஆண்ட்ராய்டு செயலிக்கான அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது. இது மிகவும் பயனுள்ள call waiting அம்சத்தைக் கொண்டுவருகிறது. பெயர் தெளிவாகக் குறிப்பிடுவது போல, பயனர்கள் வேறொருவருடன் மற்றொரு வாட்ஸ்அப் அழைப்பின் நடுவில் இருக்கும்போது, அவர்கள் ஒரு வாட்ஸ்அப் அழைப்பைப் பெறும்போது எச்சரிக்கிறது. உள்வரும் இரண்டாவது வாட்ஸ்அப் அழைப்பைத் தானாகத் துண்டிப்பதற்குப் பதிலாக, பயனர்கள் இப்போது ஒரு எச்சரிக்கையைப் பெறுவார்கள், மேலும் அதை நிராகரிக்க தேர்வு செய்யலாம் அல்லது மற்றொன்றை ஏற்க நடந்துகொண்டிருக்கும் வாட்ஸ்அப் அழைப்பைத் துண்டிக்கவும். இருப்பினும், இரண்டு பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரே வரியில் இருக்க முடியாது என்பதால், இது ஒரு அழைப்பை நிறுத்தி (call on hold) வைப்பதற்கு சமமானதல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த மாதத்தின் பிற்பகுதியில் ஐபோன் செயலிக்காக கிடைத்த பிறகு, இந்த அம்சம் இப்போது இரண்டு ஆண்ட்ராய்டுக்கும் கிடைக்கிறது.

பீட்டா மற்றும் நிலையான ஆண்ட்ராய்டு சேனல்களுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் (WhatsApp) அப்டேட், அழைப்பு காத்திருப்பு (call waiting) அம்சத்தைக் கொண்டுவருகிறது. இது இப்போது கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக கிடைக்கிறது. மேம்பட்ட குழு தனியுரிமை அமைப்புகளின் (group privacy settings) வருகை மற்றும் செயலிக்கான fingerprint unlock ஆதரவு ஆகியவற்றை சேஞ்ச்லாக் குறிப்பிடுகிறது. வாட்ஸ்அப்பில், அழைப்பு காத்திருப்பு அம்சம் இப்போது நிலையான ஆண்ட்ராய்டு செயலியின் பதிப்பு 2.19.352, அதே போல் பதிப்பு 2.19.357 மற்றும் பீட்டா செயலியின் பதிப்பு 2.19.358 ஆகியவற்றில் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியும்.

நீங்கள் இதுவரை அப்டேட்டைப் பெறவில்லை எனில், APKMirror-ல் இருந்து நிலையான கட்டமைப்பை இங்கே பதிவிறக்கம் செய்யலாம். நினைவுகூர, நவம்பர் பிற்பகுதியில், iOS-க்கான வாட்ஸ்அப் v2.19.120, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட Chat screen-உடன் அழைப்பு காத்திருப்பு அம்சத்தையும், அதே போல் VoiceOver mode-ஐப் பயன்படுத்தும் போது உங்கள் செய்திகளை பிரெய்லி விசைப்பலகையிலிருந்து (Braille keyboard) நேரடியாக அனுப்பும் திறனையும் கொண்டு வந்தது.


WhatsApp call waiting எவ்வாறு செயல்படுகிறது?

அப்டேட்டுக்கு முன்பு, ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றொரு வாட்ஸ்அப் அழைப்பின் மத்தியில், ஒரு வாட்ஸ்அப் அழைப்பைப் பெற்றபோது, ​​உள்வரும் அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டது. மேலும், இருக்கும் உரையாடல் முடிந்ததும் அவர்கள் தவறவிட்ட அழைப்பு அறிவிப்பைக் காண்பார்கள். ஆனால், அப்டேட்டைத் தொடர்ந்து, பயனர்கள் மற்றொரு நபருடன் பேசும்போது உள்வரும் அழைப்பைத் தேர்வுசெய்யலாம்.

வாட்ஸ்அப்பில் உள்வரும் அழைப்பு UI இப்போது ‘Decline' பொத்தானுடன் பச்சை ‘End & Accept' பொத்தானைக் காட்டுகிறது. நீங்கள் சிவப்பு ‘Decline' பொத்தானை அழுத்தினால், உள்வரும் அழைப்பு ரத்துசெய்யப்படும், மேலும் உங்கள் தற்போதைய அழைப்பைத் தொடரலாம். இருப்பினும், நீங்கள் ‘End & Accept பொத்தானைத் தட்டினால், நடப்பு அழைப்பு துண்டிக்கப்படும், இதன்மூலம் நீங்கள் மற்ற நபருடன் பேசலாம்.

செல்லுலார் நெட்வொர்க்கில் வழக்கமான அழைப்பை call holding போலல்லாமல், இரண்டாவது உள்வரும் அழைப்பை நிறுத்தி வைக்கவும், ஒரே நேரத்தில் இரண்டு நபர்களுடன் இணைக்கவும் வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்காது. நடப்பு வாட்ஸ்அப் அழைப்பைத் தொடர அல்லது உள்வரும் இரண்டாவது அழைப்பை ஏற்றுக்கொள்வதற்காக அதைத் துண்டிக்க, இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்யுங்கள்.

அழைப்பு காத்திருப்புக்கு கூடுதலாக, புதிய வாட்ஸ்அப் அப்டேட் புதுப்பிக்கப்பட்ட குழு தனியுரிமை அம்சத்தின் பரந்த அளவையும் குறிக்கிறது. இது, ஒரு வாட்ஸ்அப் அழைப்பில் யார் சேர்க்கலாம் என்பதை பயனர்கள் தீர்மானிக்க அனுமதிக்கிறது. இந்த பாதையைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இதை பார்க்கலாம்: Account > Privacy > settings menu-வில் உள்ள Groups. புதிய நிலையான மற்றும் பீட்டா வாட்ஸ்அப் அப்டேட்டுகளின் சேஞ்ச்லாக், அக்டோபரில் மீண்டும் அறிவிக்கப்பட்ட செயலிக்கான fingerprint lock அம்சத்தின் வருகையும் குறிப்பிடுகிறது. Settings > Account > Privacy > Fingerprint lock-க்கு சென்று இந்த அம்சத்தை இயக்கலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Watch GT 6 Pro, GT 6: 21 நாள் பேட்டரி, IP69 ரேட்டிங் – இந்தியா விலை & அம்சங்கள்!
  2. OnePlus 15R, Pad Go 2 இந்திய அறிமுகம்: தேதி, அம்சங்கள் விவரம்!
  3. Oppo A6x: 6500mAh பேட்டரி, Dimensity 6300 – முழு விவரம்!
  4. 200MP கேமரா, 8000mAh பேட்டரி! HONOR 500 Pro-வில் Snapdragon 8 Elite – வெறித்தனமான அம்சங்களுடன் அறிமுகம்
  5. OnePlus ரசிகர்களே! உங்க 15R-ஆ இதுதான்! Snapdragon 8 Gen 5 சிப்செட்டோட புதிய Ace 6T போன்
  6. மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek
  7. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  8. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  9. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  10. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »