வாட்ஸாப் பீட்டா வெர்ஷனில் மியூட் மற்றும் ஸ்டிக்கர்கள்

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 17 ஜூலை 2018 19:07 IST
ஹைலைட்ஸ்
  • மியூட் பட்டனை சோதித்து வருகிறது வாட்ஸாப்
  • கூடிய விரைவில் ஸ்டிக்கர்கள் அறிமுகமாக உள்ளது
  • mark as read பட்டனும் வர இருக்கிறது

 

வாட்ஸாப் நிறுவனம் மியூட் மற்றும் mark as read பட்டன்களை தனது பீட்டா வெர்ஷனில் சோதித்து வருகிறது. நோட்டிஃபிக்கேஷன்களை இந்த பட்டன் மூலம் மியூட் செய்ய முடியும். 51 மெசேஜ்களுக்கு மேல், ஒரே நபரிடம் இருந்து மெசேஜ் வந்தால், இந்த மியூட் பட்டன் நோட்டிஃபிக்கேஷனில் தோன்றும். ரிப்ளை டூ பட்டனுக்கு பதில் இந்த மியூட் பட்டன் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் வாட்ஸாப்பை திறக்காமலே, மேசேஜ்களை மியூட் செய்ய முடியும்.

இந்த பீட்டா வெர்ஷனை apk ஆக கூகுள் பீட்டா புரோக்கிராமில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து பீட்டா பயன்பாட்டாளர்களுக்கும் மியூட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், mark as read பட்டன் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை.

மேலும்,அந்நிறுவனம் ஸ்டிக்கர்களையும் சோதனை செய்துவருகிறது. பீட்டா வெர்ஷன் 2.18.218-ல் இந்த ஸ்டிக்கர்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில், ஸ்டிக்கர்கள் பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், வாட்ஸாப் ஸ்டிக்கர் ஸ்டோரில், புதிய அப்டேட்டட் ஸ்டிக்கர்களுக்கு பச்சை நிற பிளஸ் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

WABetaInfo என்ற நிறுவனம் வெளியிட்ட தகவல் படி, Bibimbap Friends மற்றும் Unchi & Rollie என்ற பெயரில் புதிய ஸ்டிக்கர்கள் இடம் பெற்றிருப்பதாக படங்களோடு கூறியிருக்கிற்து. ஃபேஸ்புக்கின் ஒரு பிளாக்கில், வெளியில் இருந்து டெவலப்பர்கள் உருவாக்கும் ஸ்டிக்கர்களும் வாட்ஸாப்பில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp for Android, WhatsApp
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.