WhatsApp-ல் வரவிருக்கும் Strict Account Settings என்ற புதிய அம்சம் சைபர் தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
Photo Credit: WhatsApp
WhatsApp புதிய பாதுகாப்பு மோட், பயனர்களை சைபர் தாக்குதலிலிருந்து காக்கும்
இப்போதெல்லாம் சைபர் தாக்குதல்கள் ரொம்ப அதிகமாயிட்டு இருக்கு. அதிலிருந்து வாட்ஸ்அப் பயனர்களைப் பாதுகாக்க, Meta நிறுவனம் ஒரு சூப்பரான செக்யூரிட்டி ஃபீச்சரை கொண்டு வர்றாங்க. அதுதான் 'Strict Account Settings. WhatsApp ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.25.33.4-ன் கோட்லதான் இந்த புதிய அம்சம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. இது இன்னும் டெவலப்மென்ட் ஸ்டேஜ்-லதான் இருக்கு. யாருக்கெல்லாம் டார்கெட் செய்யப்பட்ட Cyberattacks வரும்னு பயம் இருக்கோ, அவங்களுக்காகவே இதை பிரத்யேகமா டிசைன் பண்ணியிருக்காங்க.
இந்த Strict Account Settings மோட் எப்படி வேலை செய்யும்னு பார்க்கலாம். இது ஒரு 'Lockdown' ஸ்டைல் செக்யூரிட்டி மோட் மாதிரி செயல்படும். அதாவது, இந்த அம்சத்தை நீங்க ஒரே ஒரு Toggle மூலம் ஆன் பண்ணினாலே போதும், உங்க அக்கவுண்ட்டோட Advanced Security மற்றும் Privacy Settings எல்லாமே ஆட்டோமேட்டிக்கா ஆன் ஆகிடும். நாம தனியா ஒவ்வொரு செட்டிங்கையும் மாத்த வேண்டியதில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple's App Store to Introduce Additional Ads Across Search Queries in 2026