Whatsapp Update: புதிதாக வரவுள்ள செர்ச் ஆப்ஷன், எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள்!

மெசேஜ் எக்ஸ்பிரி மூலம் ஒரு மெசேஜ்க்கான கால நேரத்தை நீங்களே செட் செய்து கொள்ளலாம்

Whatsapp Update: புதிதாக வரவுள்ள செர்ச் ஆப்ஷன், எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள்!

Photo Credit: WABetaInfo

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் செர்ச் ஆப்ஷன் மற்றும் எக்ஸ்பிரி மெசேஜ் வசதிகள் காணப்பட்டுள்ளன

ஹைலைட்ஸ்
  • Advanced Search feature lets users narrow down search to file type
  • Expiring Messages will delete chats automatically after seven days
  • Based on screenshots, anyone can turn this feature on and off
விளம்பரம்

வாட்ஸ்அப்பில் புதிதாக செர்ச் ஆப்ஷன், மெசேஜ் எக்ஸ்பைரி உள்ளிட்ட அம்சங்கள் வரவுள்ளன. இது என்ன அம்சங்கள், எப்போது வரும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாற்றங்கள் வசதிக்காகவும், பயனர்களுக்கு பயனுள்ள வகையிலும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்படுகின்றன. இந்த அப்டேட்டுகள் நமது வாட்ஸ்அப்பில் வருவதற்கு முன்பாக பீட்டா வெர்ஷனில் பரிசோதிக்கப்படும். அதன் பிறகே பயனர்களுக்கு கிடைக்கும். 

இந்த நிலையில், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இரண்டு புதிய அப்டேட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனைக் கண்காணித்து வரும் WABetaInfo என்ற தளம் இந்த அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் செர்ச் ஆப்ஷன் மற்றும் எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள் காணப்பட்டுள்ளன. இது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் v2.20.197.10 இல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு v2.20.197.7 வெளியானது. இந்த இரண்டு அப்டேட்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். வெகு சில பயனாளர்களால் மட்டுமே வித்தியாசத்தைப் பார்த்து புதிய அப்டேட்டை அடையாளம் காண முடியும். 

whatsapp expiring messages wabetainfo WhatsApp

வாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அம்சங்கள்
Photo Credit: WABetaInfo

வாட்ஸ்அப்பில் இதுவரையில செர்ச் ஆப்ஷன் என்பது பொதுவாகவே இருந்து வந்தது. அதாவது ஒரு வார்த்தையை செர்ச் செய்தால், அந்தக் குறிப்பிட்ட வார்த்தையைக் கொண்ட அனைத்து டெக்ஸ்ட் மெசேஜ்கள், டாக்குமென்ட், புகைப்படம், ஆடியோ பைல் என  எல்லாம் வந்துவிடும். 

ஆனால், புதிய அப்டேட்டில் ஒவ்வொன்றும் தனித்தனி ஆப்ஷன்களாக கொடுக்கப்பட்டுள்ளன. செர்ச் ஐக்கானை டச் செய்தால், அதன் அருகில் டாக்குமென்ட், புகைப்படம், ஆடியோ பைல் ஆகியவற்றுக்கான பட்டன்களும் தோன்றும். நமக்கு எந்த ஆப்ஷனில் தேட வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். 

இதே போல், மெசேஜ் எக்ஸ்பைரி மூலம் ஒரு மெசேஜ்க்கான கால நேரத்தை நீங்களே செட் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு மெசேஜை அனுப்புகிறீர்கள், அது ஒருவாரம் மட்டுமே இருக்க வேண்டும், அதன் பிறகு அழிந்து விட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு ஏற்ப எக்ஸ்பைரி காலத்தை செட் செய்துவிட்டு அனுப்பலாம்.  இந்தப் புதிய வசதிகள் ஏற்கனவே ஜிமெயிலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. DSLR-க்கு டஃப் கொடுக்க Vivo ரெடி! Zeiss-உடன் கைகோத்து Vivo X300 சீரிஸ் இந்தியாவிற்கு வருது
  2. OnePlus-ன் கேமிங் ராட்சசன் வந்துட்டான்! 7,800mAh பேட்டரி பவர்! 165Hz டிஸ்ப்ளே! OnePlus Ace 6-ன் அம்சங்கள் என்னென்ன?
  3. ஒன்பிளஸ் 15 வந்துவிட்டது! பேட்டரி வேற லெவல்! 7300mAh பேட்டரி பவர் விலையும், ஸ்பெக்ஸ்ஸும் பார்க்கலாமா?
  4. கேமராவில் புரட்சி! 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் உடன் Xiaomi 17 Ultra வரப்போகுது
  5. அல்ட்ரா-ஸ்லிம் செக்மென்ட்டில் Motorola-வின் புதிய ஆட்டம்! Moto X70 Air இந்திய லான்ச் டீஸ் ஆகி இருக்கு! விலை ₹30,000-க்குள் இருக்குமா?
  6. சின்ன ஃபோன் பிரியர்களுக்கு Vivo-வின் சர்ப்ரைஸ்! Vivo S50 Pro Mini-இல் Dimensity 9400 சிப்செட்
  7. HMD-ன் அடுத்த மாடுலர் ஃபோன் ரெடி! கேமிங், வயர்லெஸ் சார்ஜிங் என ஒன்பது புது Smart Outfits! HMD Fusion 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
  8. Nothing ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! Nothing Phone 3a Lite இன்று மாலை அறிமுகம்! மலிவு விலையில் Glyph லைட் வருதா?
  9. iQOO ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! iQOO 15 நவம்பரில் கன்ஃபார்ம்! மிரட்டலான அம்சங்கள் உள்ளே!
  10. OnePlus ரசிகர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 15, Ace 6 விலை லீக்! ரூ. 53,100 ஆரம்ப விலையில் 7300mAh பேட்டரி போனா?
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »