பயணிகளை ரகசியமாக லைவ் ஸ்ட்ரீம் செய்யும் உபர், லிப்ட் ஓட்டுனர் - மிசூரியில் நடந்த பயங்கரம்

விளம்பரம்
Written by Hamza Shaban, The Washington Post மேம்படுத்தப்பட்டது: 24 ஜூலை 2018 20:24 IST
ஹைலைட்ஸ்
  • வாகனத்தில் சவாரி வந்தவரை ஓட்டுனர் லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளார்
  • பயணிகளின் தனிநபர் உரிமையில் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்
  • வீடியோ ரெக்கார்டிங் செய்ய ஒருவருடைய அனுமதி இருந்தால் போதுமானது

அமேசான்.காம் நிறுவனத்தின் அங்கமாக உள்ள ட்விட்ச் ஆப், வீடியோ லைவ் ஸ்ட்ரீம் செய்யும் வசதி கொண்டுள்ளது. மிசூரி பகுதியை சேர்ந்த உபர், லிப்ட் அப் வாகன ஓட்டுனர், பயணிகளுடன் சவாரியில் இருக்கும் வீடியோவை ரகசியமாக லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிசூரி பகுதியை சேர்ந்த 32 வயது ஜேசன், தனது வாகனத்தில் சவாரி வந்தவரின் லைவ் வீடியோவை ட்விட்ச் ஆப்பில் பதிவிட்டுள்ளார். இது போன்று வாகன ஓட்டுனர்கள் வீடியோ லைவ் ஸ்ட்ரீம் செய்வது முதல் முறை இல்லை. எனினும், வீடியோவில் பதிவு செய்யப்பட்ட உரையாடல் சர்ச்சைக்குரியதாக இருந்துள்ளது. அதனால், இந்த வழக்கு தீவிரமடைந்துள்ளது

இந்த வழக்கு குறித்து கருத்து பதிவு செய்துள்ள சிகாகோ வழக்கறிஞர், பயணிகள் மற்றும் ஓட்டுனரின் பாதுக்காப்பிற்காக டாஷ்போர்டு கேமராக்களை வாகனங்களில் பயன்படுத்தலாம் என்றார். இதன் மூலம், காப்பீட்டு திட்டம், விபத்து போன்ற சமயங்களில் செய்யப்படும் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்றார்.

உபர் வாகன சேவையில், பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதை கண்கானிக்க, வீடியோ ரெக்கார்டிங் செய்ய ஓட்டுனர்களுக்கு அனுமது வழங்கியுள்ளது. ஆனால், இந்த வாய்ப்பை தவறுதலாக பயன்படுத்தும் உபர் ஓட்டுனர்கள், வாடிக்கையாளரின் தனிநபர் உரிமையில் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்

குறிப்பாக, மிசூரி போன்ற பகுதிகளில், வீடியோ ரெக்கார்டிங் செய்ய ஒருவருடைய அனுமதி இருந்தால் போதுமானது என்ற சட்டம் உள்ளது. ஆனால், கலிபோர்னியா, ப்ளோரிடா போன்ற பகுதிகளில், வீடியோவில் பங்கு பெற்றுள்ள அனைவரும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றச்செயலில் ஈட்டுபட்ட ஓட்டுனரை உபர் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. எனினும், இது போன்ற குற்றங்கள் நடைப்பெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Uber, Lyft, Twitch
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  2. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  3. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  4. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
  5. "இது வேற லெவல்!" - Apple-ன் 'Awe Dropping' நிகழ்வு! iPhone 17, Apple Watch Series 11, AirPods Pro 3-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  7. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  8. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  9. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  10. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.