அமேசான்.காம் நிறுவனத்தின் அங்கமாக உள்ள ட்விட்ச் ஆப், வீடியோ லைவ் ஸ்ட்ரீம் செய்யும் வசதி கொண்டுள்ளது. மிசூரி பகுதியை சேர்ந்த உபர், லிப்ட் அப் வாகன ஓட்டுனர், பயணிகளுடன் சவாரியில் இருக்கும் வீடியோவை ரகசியமாக லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிசூரி பகுதியை சேர்ந்த 32 வயது ஜேசன், தனது வாகனத்தில் சவாரி வந்தவரின் லைவ் வீடியோவை ட்விட்ச் ஆப்பில் பதிவிட்டுள்ளார். இது போன்று வாகன ஓட்டுனர்கள் வீடியோ லைவ் ஸ்ட்ரீம் செய்வது முதல் முறை இல்லை. எனினும், வீடியோவில் பதிவு செய்யப்பட்ட உரையாடல் சர்ச்சைக்குரியதாக இருந்துள்ளது. அதனால், இந்த வழக்கு தீவிரமடைந்துள்ளது
இந்த வழக்கு குறித்து கருத்து பதிவு செய்துள்ள சிகாகோ வழக்கறிஞர், பயணிகள் மற்றும் ஓட்டுனரின் பாதுக்காப்பிற்காக டாஷ்போர்டு கேமராக்களை வாகனங்களில் பயன்படுத்தலாம் என்றார். இதன் மூலம், காப்பீட்டு திட்டம், விபத்து போன்ற சமயங்களில் செய்யப்படும் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்றார்.
உபர் வாகன சேவையில், பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதை கண்கானிக்க, வீடியோ ரெக்கார்டிங் செய்ய ஓட்டுனர்களுக்கு அனுமது வழங்கியுள்ளது. ஆனால், இந்த வாய்ப்பை தவறுதலாக பயன்படுத்தும் உபர் ஓட்டுனர்கள், வாடிக்கையாளரின் தனிநபர் உரிமையில் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்
குறிப்பாக, மிசூரி போன்ற பகுதிகளில், வீடியோ ரெக்கார்டிங் செய்ய ஒருவருடைய அனுமதி இருந்தால் போதுமானது என்ற சட்டம் உள்ளது. ஆனால், கலிபோர்னியா, ப்ளோரிடா போன்ற பகுதிகளில், வீடியோவில் பங்கு பெற்றுள்ள அனைவரும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குற்றச்செயலில் ஈட்டுபட்ட ஓட்டுனரை உபர் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. எனினும், இது போன்ற குற்றங்கள் நடைப்பெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்