விதிகளை மீறி பயனர்களின் தகவல்களைத் திரட்டிய டிக்டாக்?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 13 ஆகஸ்ட் 2020 11:47 IST
ஹைலைட்ஸ்
  • TikTok leveraged a flaw in Android to access MAC addresses from devices
  • Google restricted app developers from collecting MAC addresses
  • TikTok reportedly used a workaround to overcome Google’s restrictions

MAC முகவரி,  IMEI எண்கள் ஆகியவற்றை செயலிகள் எடுப்பதற்கு கூகுள் தடை விதித்துள்ளது. 

டிக்டாக் ஆப் விதிமுறைகளை மீறி பயனர்களின் தனிப்பட்ட MAC முகவரி விவரங்களை திரட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைத் தகராறு ஏற்பட்டதையடுத்து, டிக்டாக் உள்ளிட்ட சீன சார்ந்த செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. மேலும், அமெரிக்காவிலும் டிக்டாக்கை தடை விதிக்கப்பட்டு, 45 நாட்களில் இந்த தடை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தற்போது டிக்டாக் மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்களில் Media Access Control (MAC) எனப்படும் முகவரி, போனின் தனிப்பட்ட முகவரி ஆகும். இந்த MAC முகவரி,  IMEI எண்கள் ஆகியவற்றை செயலிகள் எடுப்பதற்கு கூகுள் தடை விதித்துள்ளது. 

டிக்டாக் உள்டப பல  சீன செயலிகள், பயனர்களின் MAC முகவரியை குறுக்கு வழியில் திரட்டியிருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இவ்வாறு சுமார் 15 மாதங்களாக , லட்சக்கணக்கான பயனர்களிடத்தில் இருந்து தனிப்பட்ட அடையாள எண்களை கடந்த நவம்பர் மாதம் வரையில் டிக்டாக் திரட்டியுள்ளது. 

முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனில், MAC முகவரியை மூன்றாம் தரப்பு ஆப் டெலவ்பர்கள் எடுப்பதை தடை செய்தது. அதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள், பயனர்களின் MAC முகவரியை எடுக்கக்கூடாது என்று தடை விதித்தது. 

ஆனால், இத்தகைய விதிமுறைகளை எல்லாம் மீறி டிக்டாக் செயலி குறுக்கு வழியில் நூதனமாக MAC முகவரியை எடுத்துள்ளது. பயனர்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல், அமெரிக்கப் பயனர்களின் இந்தத் தகவல்களை சீனாவுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: TikTok Android, TikTok, TikTok Mac
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  2. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  3. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
  4. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  5. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  6. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
  7. Samsung Galaxy A37 5G மற்றும் Galaxy A57 5G விவரங்கள் வெளியீட்டுக்கு முன்பே வெளியான தகவல்
  8. Nothing Phone 4a இந்தியாவில் அறிமுகம் – Glyph Bar Interface உடன்; Nothing Phone 4a Proவும் வெளியீடு
  9. Local Times OTT வெளியீடு: தமிழ் காமெடி டிராமா தொடரை எப்போது, எங்கே பார்க்கலாம்?
  10. OnePlus 15T – 1.5K 165Hz டிஸ்ப்ளே வரலாம்; முக்கிய அம்சங்களை நிறுவனம் உறுதி செய்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.