டிக் டாக் செயலியை ப்ளே ஸ்டாரில் 50 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். இது 85 எம்.பி. அளவு கொண்டதாக இருக்கிறது.
இன்னும் சில தினங்களில் பேஸ்புக்கிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
சர்வதேச அளவில் 50 கோடிக்கும் அதிகமாக டிக்டாக் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், அதனைப் போன்ற ஒரு செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவர பேஸ்புக் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் டிக் டாக்கைப் பற்றி தெரியாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு அந்த ஆப் பயன்பாட்டில் இருக்கிறது. சிறியவர்கள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் என டிக் டாக்கை பெருமளவு பயன்படுத்தி சிறிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
வரவேற்பு அதிகம் உள்ள அதே நிலையில் சர்ச்சைகளையும் டிக் டாக் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவதாகவும், சிறியவர்கள் மனதில் நஞ்சு விதைப்பதாகவும் கூறி வழக்குகள் தொடரப்பட்டன. இதில் டிக் டாக்கிற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் அதை நீக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இதன்பின்னர் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டு மீண்டும் டிக் டாக் களத்திற்கு வந்தது. இந்த நிலையில் அதேபோன்றதொரு ஆப் உருவாக்க பேஸ்புக் தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக ட்விட்டரில் சிறிய வீடியோக்கள் பிரிவின் தலைமை நிர்வாகியாக இருந்த ஜேசன் டாபை பேஸ்புக் பணிக்கு எடுத்துள்ளது. பேஸ்புக்கில் அவருக்கு உற்பத்தி பிரிவின் தலைமை நிர்வாகி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிக் டாக் போன்றதொரு செயலியை உருவாக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அவர்களுக்கு புதியதொரு அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதிய ஆப் உருவாக்கப்படும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench