Photo Credit: SonyLIV
உலகம் முழுவதும் ஓ.டி.டி. பிளாட்பார்முக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் சேவைகளை வழங்கி வரும் சோனி லைவ் தனது சந்தா கட்டணத்தை 200 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அதன் சந்தாதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய கட்டணத்தின்படி,
ப்ரீமியம் ப்ளான் ஒரு மாதத்திற்கு - ரூ. 299
ப்ரீமியம் ப்ளான் 6 மாதத்திற்கு - ரூ. 699
ப்ரீமியம் ப்ளான் ஓராண்டுக்கு - ரூ. 999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனி லைவை பொறுத்தளவில் ஸ்டேன்ட் அப் காமெடி ஷோ, இந்திய மற்றும் அமெரிக்க டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இதேபோன்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்படுகின்னறன.
புதன்கிழமை நள்ளிரவு 11.59 வரையிலும், சோனி லைவ் ப்ரீமியத்தின் ஒரு மாத சந்தா ரூ. 99 ஆகவும், 6 மாத சந்தா ரூ. 299 ஆகவும், ஓராண்டு சந்தா ரூ. 499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாத சந்தா 200 சதவீதமும், அரையாண்டு சந்தா 134 சதவீதமும், ஓராண்டு சந்தாவை 100 சதவீதமும் சோனி லைவ் அதிகரித்துள்ளது.
துவக்கத்தில், ஜிம்மி ஷெர்கில் நடித்த க்ரைம் த்ரில்லர் யுவர் ஹானர் மற்றும் ரன்வீர் ஷோரி தலைமையிலான இருண்ட நகைச்சுவை திரைப்படம் கடாக் ஆகியவற்றில் சோனி லைவில் ஒலிபரப்பு செய்யப்பட்டன.
ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், மனோஜ் பாஜ்பாய் (கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர்) தயாரித்து நடித்துள்ள விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட போன்ஸ்லே திரைப்படத்தை சோனிலிவ் ஒலிபரப்பவுள்ளது.
கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஓ.டி.டி. தளங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்