கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து PUBG நீக்கம்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 4 செப்டம்பர் 2020 20:36 IST
ஹைலைட்ஸ்
  • பப்ஜி சர்வர் இயக்கத்தில் உள்ளது
  • ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்
  • பப்ஜியை மீண்டும் கொண்டு வர டென்சன்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துகிறது

Photo Credit: Tencent

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டுள்ளது. 

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக 117 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதில் பிரபல விளையாட்டு ஆப்பான பப்ஜியும் அடங்கும். இளைஞர்களின் மத்தியில் பிரபலான இந்த பப்ஜி ஆப்பானது, ஊரடங்கு காலத்தில் மட்டும் 17.5 கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் பப்ஜியை அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.

இந்தநிலையில், தற்போது பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே பப்ஜியை பதிவிறக்கம் செய்தவர்கள், தொடர்ந்து விளையாடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதனை அப்டேட் செய்ய முடியாது. 

இதற்கு முன்பு டிக்டாக் தடை செய்யப்பட்ட போது, இந்தியாவில் அதன் சர்வரும் நிறுத்தப்பட்டது. இதனால் டிக்டாக் தடைக்குப் பிறகு, அதை ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்களும் பயன்படுத்த முடியாமல் போனது. அதே போல், பப்ஜியின் சர்வர் நிறுத்தப்படும் வரையில், அதை இன்ஸ்டால் செய்திருப்பவர்கள் தொடர்ந்து விளையாட முடியும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PUBG, PUBG Mobile, PUBG Lite, Tencent

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.