ஒன்பிளஸ் 8 புரோ, ஒன்பிளஸ் 8 அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 15 ஏப்ரல் 2020 11:10 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் 8 ப்ரோவில் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது
  • ஒன்பிளஸ் 8, 90Hz டிஸ்பிளேவுடன் வருகிறது
  • ஒன்பிளஸ் 8 ப்ரோ, 120Hz டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது

ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது

ஒன்பிளஸின், புதிய ஒன்பிளஸ் 8 புரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது. புதிய ஒன்பிளஸ் போன்கள் 5 ஜி ஆதரவைக் கொண்டுள்ளன. இது ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பையும், ஒன்பிளஸ் 8 மூன்று பின்புற கேமராக்களையும் கொண்டுள்ளது. 


ஒன்பிளஸ் 8 புரோ விலை:  

OnePlus 8 Pro-வின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை 899 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.68,400) ஆகும். அதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை 999 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.76,000) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Glacial Green, Onyx Black மற்றும் Ultramarine Blue (12 ஜிபி + 256 ஜிபி மட்டுமே) கலர் ஆப்ஷன்களில் வருகிறது. 

Advertisement


ஒன்பிளஸ் 8 விலை: 

OnePlus 8​-ன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 699 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,200) ஆகும். அதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 799 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60,800) விலையைக் கொண்டுள்ளது. இந்த போன், Glacial Green மற்றும் Interstellar Glow (12 ஜிபி + 256 ஜிபி மட்டுமே) கலர் ஆப்ஷன்களில் வருகிறது. 


சார்ஜரின் விலை:

ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜரின் விலை 69.95 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,300) ஆகும்.

ஒன்பிளஸ் 8 ப்ரோ விவரங்கள்: 

ஒன்பிளஸ் 8 ப்ரோ, டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, ஆக்ஸிஜன்ஓஎஸ் உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த போன் 6.78 அங்குல QHD + (1440x3168 பிக்சல்கள்) திரவ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 865 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 

ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 689 சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 48 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை உள்ளது. மேலும், கேமரா அமைப்பில் 5 மெகாபிக்சல் “கலர் ஃபில்டர்” கேமரா சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3x ஹைப்ரிட் சப்போர்ட் மற்றும் 30/60fps-ல் 4K வீடியோ ரெக்கார்டிங்கை வழங்குகிறது. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.

OnePlus 8 ப்ரோவில், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இதை விரிவுபடுத்த முடியாது. இந்த போனில், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது. ஒன்ப்ளஸ் 8 ப்ரோவில், வார்ப் சார்ஜ் 30 டி (5 வி / 6 ஏ) மற்றும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் ஆதரவுடன், 4,510 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் 165.3x74.35x8.5 மிமீ அளவு மற்றும் 199 கிராம் எடை கொண்டது.

Advertisement

ஒன்பிளஸ் 8 டிரிபிள் ரியர் கேமராக்களுடன் வருகிறது


ஒன்பிளஸ் 8 விவரங்கள்:

ஒன்பிளஸ் 8, டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, ஆக்ஸிஜன்ஓஎஸ் உடன் ஆண்ட்ராய்டு 10-ல்இயக்குகிறது. இந்த போன், 6.55 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) திரவ அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC உள்ளது. இது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.  

போனில், டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில், 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகிய உள்ளன. இந்த போன், 30/60fps-ல் 4K வீடியோ பதிவை ஆதரிக்கிறது. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.

Advertisement

ஒன்பிளஸ் 8, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 இருவழி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இதை விரிவுபடுத்த முடியாது. இந்த போனில், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது. இதில் வார்ப் சார்ஜ் 30 டி (5 வி / 6 ஏ) ஐ ஆதரவுடன் 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் 160.2x72.9x8.0 மிமீ அளவு மற்றும் 180 கிராம் எடை கொண்டது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build quality, IP68 rating
  • Bright, fluid display
  • Very good rear cameras
  • Solid overall performance
  • Great battery life
  • Fast wireless charging
  • Bad
  • Selfie camera could be better
  • Excessive rear camera bulge
 
KEY SPECS
Display 6.78-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 48-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4510mAh
OS Android 10
Resolution 1440x3168 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good build quality
  • Vivid display
  • Excellent performance and software
  • Solid battery life
  • Decent camera performance
  • Bad
  • No IP rating or wireless charging
  • Low-light video could be better
  • 12GB variant isn’t great value
 
KEY SPECS
Display 6.55-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.