இந்தியாவில் இன்று சியோமி நிறுவனம் சார்பில் 'ரெட்மி கோ' என்னும் அடிப்படை வசதிகொண்ட ஆண்டுராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனுடன் 'எம்ஐ பே' (Mi Pay) என்னும் பணம் செலுத்தும் ஆப் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சியோமி நிறுவனம் கூறியதாவது, 'இந்திய மக்களின் தேவையை உணர்ந்து நேஷ்னல் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா எம் பே ஆப்-க்கு ஓப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து எம்ஐ பே ஆப்பை செயல் படுத்த போகிறோம்.
மேலும் இனி வருகின்ற நாட்களில் எம்ஐ ஆப் ஸ்டோர்களில் 'எம்ஐபே ஆப்' பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் இனி வரும் நாட்களில் MIUI மென்பொருட்களுடன் இணைந்து எம்ஐ பே ஆப் இன்றி பணத்தை செலுத்தும் வசதி கிடைக்க வாய்புள்ளது.
எம்ஐ பே ஆப் அமைப்புகள்:
இந்தியாவில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் முன்னணி ஆப்களான கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற ஆப்கள் வழங்கும் வசதிகளான பண பரிமாற்றம், வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புவது, பில் மற்றும் போன் ரீசார்ஜூகள் போன்ற பல முக்கிய அம்சங்களுடன் இந்த எம்ஐ பே ஆப் களமிறங்குகிறது.
மேலும் எம்ஐ பே வசதியை எம்ஐ.காம் மற்றும் எம்ஐ கடைகளில் பயன்படுத்தும் வகையில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என சியோமி சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்