Zoom, Google Meet-க்கு போட்டியாக 'JioMeet' வீடியோ கான்பரன்சிங் செயலி அறிமுகம்!

Android மற்றும் iOSமொபைல் சந்தாதாரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்து வீடியோ கான்பரன்சிங் செய்ய JioMeet-ஐப் பயன்படுத்தலாம். Windows மற்றும் macOS கணினிகளிலும் JioMeet-ஐப் பயன்படுத்தலாம்.

Zoom, Google Meet-க்கு போட்டியாக 'JioMeet' வீடியோ கான்பரன்சிங் செயலி அறிமுகம்!

JioMeet, Google Meet, Microsoft Teams மற்றும் Zoom ஆகியவற்றுடன் கடுமையான போட்டியின் முன்னணியில் கொண்டு வரும்.

ஹைலைட்ஸ்
  • வீடியோ கான்பரன்சிங் JioMeet-ல் இருந்து செய்யப்படலாம்
  • இந்த சேவையை வெவ்வேறு தளங்களில் இருந்து பயன்படுத்தலாம்
  • புதிய தளம் அனைத்து சாதனங்களிலும் கிடைக்கும்
விளம்பரம்

இந்த முறை நாட்டின் நம்பர் ஒன் தொலைத் தொடர்பு நிறுவனம் வீடியோ கான்பரன்சிங் உலகில் நுழைகிறது. Jio வியாழக்கிழமை ஒரு புதிய வீடியோ கான்பரன்சிங் தளத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்து, நிறுவனத்தின் காலாண்டு வருவாய் பதிவை வெளியிட்டது. 

புதிய JioMeet-ஐப் பயன்படுத்தி வீடியோ கான்பரன்சிங் செய்யலாம். சமீபத்தில், ஊரடங்கு காரணமாக வீடியோ கான்பரன்சிங்கின் புகழ் அதிகரித்துள்ளது. JioMeet, Google Meet, Microsoft Teams மற்றும் Zoom ஆகியவற்றுடன் கடுமையான போட்டியின் முன்னணியில் கொண்டு வரும்.

Android மற்றும் iOSமொபைல் சந்தாதாரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்து வீடியோ கான்பரன்சிங் செய்ய JioMeet-ஐப் பயன்படுத்தலாம். Windows மற்றும் macOS கணினிகளிலும் JioMeet-ஐப் பயன்படுத்தலாம். Outlook மின்னஞ்சல் சந்தாதாரர்கள் ஒரு சிறப்பு plugin-ஐப் பயன்படுத்தி மின்னஞ்சலுக்குள் இருந்து JioMeet-ஐப் பயன்படுத்தி வீடியோ கான்பரன்சிங் பெற முடியும்.

JioMeet plugin-ஐ, Google Chrome மற்றும் Mozilla Firefox ஆகியவற்றிலும் இன்ஸ்டால் செய்யலாம். இந்த எல்லா தளங்களிலிருந்தும் வீடியோ கான்பரன்சிங் எச்டி-தரமான அனுபவத்தை வழங்குவதாகவும் நிறுவனம் கூறுகிறது. உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் பாஸ்வேடைப் பயன்படுத்தி உள்நுழையலாம். guest உள்நுழைவு மூலம் வீடியோ கான்பரன்சிங் செய்ய முடியும்.

அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே, Apple App Store மற்றும் Google Play ஸ்டோரில் JioMeet செயலி தோன்றியது. மும்பையைச் சேர்ந்த நிறுவனம் பின்னர் இந்த இரண்டு சந்தைகளிலிருந்தும் புதிய செயலியை அகற்றியது. இந்த வீடியோ கான்பரன்சிங் தளத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் jiomeet.jio.com என்ற புதிய வலைத்தளத்திலிருந்து காணலாம். இந்த அறிக்கையைப் பார்க்கும் நேரத்தில் இந்த இணையதளத்தில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

முன்னதாக, நிறுவனம்  JioChat app-ன் மூலம் வீடியோ கான்பரன்சிங் உலகில் நுழைந்தது. Jio Group Talk app கடந்த ஆண்டு முன்னுக்கு வந்தது. இருப்பினும், முகேஷ் அம்பானியின் நிறுவனம் ஊரடங்கு சந்தையில் Google Meet, Microsoft Teams மற்றும் Zoom ஆகியவற்றுடன் போட்டியிட, முற்றிலும் புதிய JioMeet தளத்தை கொண்டு வந்துள்ளது.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »