இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தவறான மற்றும் வன்முறையை தூண்டும் விதமாக பகிரப்படும் போலி தகவல்களால் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் இந்தியா கேட்டுள்ளது.
200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், வாட்ஸ்ஆப்பின் உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா நிலவுகிறது. ஏற்கெனவே பிரைவஸி பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, வாட்ஸ்ஆப் மூலம் தவறான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுவது புதிய தலைவலி ஆகியுள்ளது.
இந்த ஆண்டில், இதுவரை குழந்தை கடத்தல்காரர்கள் பற்றிய தவறான தகவல்கள் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேற காரணமாக இருந்திருக்கிறது. அதில் பலரும் உயிரழந்துள்ளனர்.
குழந்தை கடத்தல்காரர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில், ஐந்து பேர் ஞாயிறு அன்று மகாராஷ்ட்ராவில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
“இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக தங்களுடைய மறுப்புகளை வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளோம். இதற்கு தீர்வு காண தக்க நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்,
காவல் துறையினர், கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்ந்து பரவி வரும் தவறான செய்தியும், தகவல்களும் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது என அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்களுடைய மெசேஜிங் சேவைகள் தவறான தகவல்கள் பகிர பயன்படுத்தப்படுகிற போது அவர்கள் தங்களுடைய கடமை மற்றும் பொறுப்புணர்வில் இருந்து தப்பிக்க முடியாது என்றது.
இத்தகைய அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வர வாட்ஸ்ஆப் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற தவறான செயல்களுக்கு அவர்களுடைய தளம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களுடைய சேவை தவறான தகவல்கள் பகிர பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுப்பது நிறுவனம் மற்றும் சமூகம் இணைந்து சந்திக்க வேண்டிய சவால் எனக் கூறியுள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம், அவர்களுடைய மெசேஜிங் சேவையில் தவறான தகவல்கள், தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை தர்வோருக்கு பரிசு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் முன்னர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், தன்னுடைய பயனர்களுக்கு போலி செய்திகளை அடையாளம் காண்பது மற்றும் அதன் சேவைகளில் மாற்றங்கள் செய்வது பற்றி பயிற்றுவித்து வருவதாக தெரிவித்துள்ளது. உதாரணமாக அதனுடைய பீட்டா சோதனையில் அனைத்து ஃபார்வர்ட் தகவல்களையும் லேபிள் செய்வதை பரிசோதித்து வருகிறது. கடந்த வாரம் க்ரூப்பில் அட்மின்கள் மட்டும் மெசேஜ் அனுப்பும் விதமாக ஒரு புதிய செட்டிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்